“தம்பி இது உண்மைனா.. இதை மட்டும் மாத்திக்காத!” – ஜெய்ஸ்வாலுக்கு இந்திய முன்னாள் வீரர் முக்கிய அறிவுரை!

0
4284
Jaiswal

இந்திய அணி தற்போது உலகக் கோப்பை முடிந்து உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் விளையாடி வருகிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான முறையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தற்பொழுது தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்தநிலையில் இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிரீன்பீல்ட் மைதானத்தில் தொடரின் இரண்டாவது போட்டி இரவு நடைபெற இருக்கிறது. அங்கு தொடர்ந்து பெய்து வரும் மழை இந்த போட்டியை நடைபெற விடுமா என்பது சந்தேகம்தான்.

மேலும் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கின்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கு நடுவே இந்திய அணிக்கு 11 டி20 சர்வதேச போட்டிகள் மட்டுமே இருக்கிறது.

எனவே இதன் காரணமாக உலகக்கோப்பைக்கு இந்திய டி20 அணியை தேர்வு செய்வதற்கு தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்திய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மாறாக உலக கோப்பைக்கு இந்திய அணியை தேர்வு செய்வதற்காகவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இஷான் கிஷான் விளையாடுவதாக இருந்தால் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று பல கிரிக்கெட் வல்லுனர்களும் நினைத்திருந்தார்கள். ஆனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இரண்டு வீரர்களுக்குமே முதல் ஆட்டத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஜெயஸ்வால் அதிரடியாக 8 பந்தில் 21 ரன்கள் எடுக்க, இசான் கிசான் 39 பந்தில் 58 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளருமான அபிஷேக் நாயர் ஜெய்ஸ்வால் பற்றி கூறும் பொழுது “பாருங்கள் அதிரடியாக விளையாடுவது ஜெய்ஸ்வால் பலம். அவர் பேட்டிங்கில் செட்டில் ஆவதற்கு நேரம் எடுக்கும் வீரர் கிடையாது. சுதந்திரத்துடன் விளையாட அவருக்கு ரோல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும், உள்நாட்டில் மும்பை மாநில அணிக்காகவும் அவர் இதே முறையில் அதிரடியாகவே தொடர்ந்து விளையாடி வருகிறார். நீங்கள் உங்கள் உள்ளுணர்வின்படி ஆக்ரோஷமான வீரராக இருந்தால், நீங்கள் தொடர்ந்து ஆக்ரோஷமாகவே விளையாட வேண்டும்!” என்று அறிவுரை கூறியிருக்கிறார்!