இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டு முதல் முதுகுப் பகுதியில் காயமடைந்து விளையாட முடியாமல் இருந்து வந்தார்.
தற்காலத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்த ஒரே பேட்ஸ்மேனாக விராட் கோலி இருப்பது போல, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ரா மட்டும்தான் இருந்தார்.
காரணம் அவரால் ஆடுகளத்தைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு செயல்பட எல்லாவிதமான பந்துகளும் அவரிடம் இருந்தது. சில நேரங்களில் அவருக்கு ஆடுகளம் என்பது முக்கியமே கிடையாது.
இங்கிலாந்தின் ஆண்டர்சன் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர். ஆனால் அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகவும் சுமாரான செயல்பாட்டை கொண்டவர். பும்ரா இப்படி இல்லாமல் எல்லா வடிவத்திலும் மிகச் சிறந்தவராக இருந்தார்.
இவர் காயம் அடைந்திருந்த வேளையில் உலகக் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என பாகிஸ்தான் அணியின் இளம் இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி பேசப்பட்டார். மேலும் இந்தியாவுக்கு எதிரான அவருடைய சில செயல்பாடுகளும் மிகச் சிறப்பாகவும் அமைந்திருந்தது.
ஆனால் இந்திய அணி அவரை தொடர்ச்சியாக சந்திப்பதற்கான வாய்ப்புகள் அமைந்ததும், உலகத்தரமான இந்திய பேட்ஸ்மேன்கள், அவரை மிக எளிதாக எதிர்கொண்டு அனாயசமாக ரன்கள் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆசியக் கோப்பையில் இருந்து அவரது பந்துவீச்சு செயல்பாடு மிகவும் சுமாராக இருந்து வருகிறது.
தற்பொழுது அவருடைய பந்துவீச்சு பார்ம் உலகக்கோப்பைகளும் சரியில்லை. புதிய பந்தில் அவரால் விக்கெட் எடுக்க முடியவில்லை என்றால் அவர் மிகவும் சாதாரண பந்துவீச்சாளர் போல மாறிவிடுகிறார்.
இதற்கு தீர்வாக பாகிஸ்தான் லெஜன்ட் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் அவருக்கு கூறும் பொழுது “ஷாகின் நன்றாக பந்து வீசுகிறார். வெளிப்படையாக உலக கோப்பையில் அவரால் என்ன ஸ்பெஷலாக செய்துவிட முடியும்? உண்மையை சொல்வது என்றால் அவரது நம்பிக்கை மிகவும் குறைவாக இருந்து வருகிறது.
அவர் விக்கெட் வீழ்த்தும் பவுலர். இப்படியானவர்கள் விக்கெட்டை பெறவில்லை என்றால் அமைதியாக இருக்க வேண்டும். மேற்கொண்டு எதையும் புதுசாக முயற்சி செய்கிறேன் என்று செய்யக்கூடாது.
சாதாரணமாக உங்களுடைய வழக்கத்தை பின்பற்றி தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டிருக்க வேண்டும். ஒன்று இரண்டு ஸ்பெல்கள் மூலம் மீண்டும் பார்ம் வந்துவிடும்!” என்று அறிவுரை கூறியிருக்கிறார்!