தம்பி உனக்கு ஒரு ODI போட்டி மட்டும்தான்.. கிளம்பி இங்க வா.. பிசிசிஐ அழைப்பு.. காரணம் என்ன?

0
13169
BCCI

ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை முடித்துக் கொண்டு இந்திய அணி தற்பொழுது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இருக்கிறது.

இதில் ஆச்சரியப்படத்தக்க ஒரு நிகழ்வாக மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் முடிந்த கையோடு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக வழக்கமாக விளையாடும் மூன்று டெஸ்ட் போட்டிகளை இரண்டு டெஸ்ட் போட்டிகளாக குறைத்து இருக்கிறது. தற்பொழுது இதுதான் மிகப்பெரிய விமர்சனம் ஆக மாறி வருகிறது.

டி20 உலகக்கோப்பைத் தொடர் வருகின்ற நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தேவையா? இதற்காக ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை குறைக்க வேண்டுமா? என்று ரசிகர்கள் தங்களுடைய கேள்விகளை முன் வைக்கிறார்கள். இது நியாயமற்றது என ஏபி.டிவில்லியர்ஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் திட்டமிட்டபடிதான் இந்தச் சுற்றுப்பயணத்தில் தொடர்கள் நடக்க இருக்கிறது. டி20 தொடர் முடிந்துள்ள நிலையில் இன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி நடைபெறும் இருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடரின் முதல் போட்டியோடு இந்திய அணியின் தற்போதைய நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நடைபெற இருக்கிறார். பிசிசிஐ அவருக்கு ஒரு போட்டி விளையாட மட்டுமே அனுமதி கொடுத்திருக்கிறது.

காரணம் என்னவென்றால், அடுத்து நடைபெற உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்று இருக்கிறார். இவர் டி20 அணியிலும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.எனவே டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் விதமாக, டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியுடன் இவரை இணைந்து கொள்ள பிசிசிஐ உத்தரவிட்டிருக்கிறது.

டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கு இந்த சுற்றுப்பயணத்தில் முக்கியத்துவம் தருகின்ற பொழுது, தற்பொழுதுதான் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்திருக்கின்ற பொழுது, இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தேவையா என்கின்ற கேள்வி பிசிசிஐ செயலால் இன்னும் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!