இங்கிலாந்தை காப்பாற்றிய ஹாரி புரூக்.. விட்டுக்கொடுக்காமல் போராடிய ஆஸ்திரேலியா.. 50 ஓவரில் சேஸ் செய்து இங்கிலாந்து அபார வெற்றி!

0
1073

இரண்டாவது இன்னிங்ஸில் 251 ரன்கள் இலக்கை 50 ஓவர்கள் செய்து அபார வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. 2-1 என ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா அணி இரண்டையும் வெற்றி பெற்று தொடரில் வலுவான முன்னிலையுடன் உள்ளது.

- Advertisement -

ஹெட்டிங்கிலே மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வெற்றி பெறவேண்டிய நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது. போட்டியில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு கேமரூன் கிரீனுக்கு பதிலாக உள்ளே வந்த மிச்சல் மார்ஸ் அதிரடியாக விளையாடி 118 ரன்கள் குவித்தார். அடுத்து அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 39 ரன்கள் அடிக்க, 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மார்க் வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஸ்டோக்ஸ் மட்டுமே கடைசிவரை போராடினார். இவர் 80 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அடுத்த அதிகபட்சமாக ஜாக் கிராலி 33 ரன்கள் அடித்தார். 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இங்கிலாந்து அணி 26 ரன்கள் பின் தங்கியது. கேப்டன் கம்மின்ஸ் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு கவாஜா 43 ரன்கள் டிராவிஸ் ஹெட் இறுதி வரை போராடி 77 ரன்கள் அடித்துக்கொடுக்க 224 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றிருந்த 26 ரன்கள் உடன் சேர்ந்து மொத்தம் 250 ரன்கள் முன்னிலையுடன் இருந்தது.

251 ரன் அடித்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க ஜோடி சிறப்பாக விளையாடி கொடுத்தனர். ஜாக் ராணி 44 ரன்கள் பெண் டக்கட் 23 ரன்கள் அடித்து அவுட் ஆகினர்.

அடுத்து உள்ளே வந்த மொயின் அலி 5 ரன்கள், ஜோ ரூட் 21 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 13 ரன்கள், ஜானி பேர்ஸ்டோவ் 5 ரன்கள் என வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வெளியேற, 171 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற்றம் கண்டது.

வெற்றி பெறுவதற்கு இன்னும் 80 ரன்கள் தேவைப்படும் நிலையில் ஜோடி சேர்ந்த ஹாரி புரூக் மற்றும் கிரிஷ் வோக்ஸ் இருவரும் சரிவில் இருந்து மீட்டு இலக்கை நெருங்குவதற்கு நல்ல பாட்னர்ஷிப் அமைத்தனர். இந்த ஜோடி ஏழாவது விக்கெட்டிற்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அபாரமாக விளையாடி வந்த ஹாரி புரூக் 75 ரன்களுக்கு அவுட் ஆனார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வோக்ஸ் 32 ரன்கள், மார்க் வுட் 16 ரன்கள் அடித்திருந்தனர். சரியாக 50 ஓவர்களில் 254 ரன்கள் அடித்து இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த ஆஷஸ் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.