ஹைதராபாத் இந்த வேலையை செய்யாதுனு நம்பறேன்.. ஆனா ராஜஸ்தான் இதை செய்தே ஆகனும் – பிரையன் லாரா பேட்டி

0
83
Lara

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் 7 போட்டிகளில் ஆறு போட்டிகளை வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் அசத்தி இருந்தது. மேற்கொண்டு தொடர்ந்து விளையாடி 8 வெற்றிகளையும் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் பல நாட்களாக தொடர்ந்தது. இந்த நிலையில் நான்கு ஆட்டங்களை தொடர்ந்து தோற்று கவலை அளிக்கிறது. இதுகுறித்து பிரையன் லாரா பேசி இருக்கிறார்.

நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், 160 முதல் 170 ரன்கள் எடுக்க வேண்டிய ஆடுகளத்தில், வெறும் 144 ரன்கள் மட்டுமே எடுத்து, ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அவர்களுடைய ஆட்டம் தொடர்ந்து நம்பிக்கை இழந்து வருவதாக தெரிகிறது.

- Advertisement -

இன்னும் ஒரு போட்டி எஞ்சி இருக்கும் நிலையில், அந்தப் போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ராஜஸ்தான அணி தள்ளப்பட்டு இருக்கிறது. ஒருவேளை ராஜஸ்தான் அணி 16 புள்ளிகள் உடன் முடித்துக் கொள்ளும் என்றால், அதே 16 புள்ளிகளுக்கு ஹைதராபாத் மற்றும் சென்னை இரண்டு அணிகளாலும் வர முடியும். அப்படி வரும் பொழுது, ராஜஸ்தான் தங்களுடைய இரண்டாவது இடத்தை இழக்கலாம். இறந்தால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிச் சுற்றில் விளையாட முடியாது.

இதுகுறித்து பிரையன் லாரா கூறும்பொழுது ” உங்கள் ஸ்கோர் போர்டில் தேவையான ரன்கள் இல்லை, இந்த சரிவு உங்களுக்கு வரும் பொழுது எல்லாமே கடினமாக மாறிவிடும். எனவே ராஜஸ்தான் இந்த சரிவில் இருந்து வெளியேறி வருவது கடினமாகத் தெரிகிறது. அவர்கள் தற்போது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அவர்களை எப்படி மேற்கொண்டு எடுத்துச் செல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் அவர்கள் அடுத்த போட்டியை உறுதியுடன் வெல்ல வேண்டும். அதே சமயத்தில் ஹைதராபாத் தனக்கு இருக்கும் இரண்டு போட்டிகளில் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமே கூட வெற்றி பெறாது என நம்புகிறேன். புள்ளிபட்டியலில் ராஜஸ்தான் மேலே இருப்பது அவசியம். அவர்களுடைய இந்தச் சரிவு குறித்து விளக்குவது கடினம். அவர்கள் முதல் பாதியில் எப்படி இருந்தார்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : என்னோட வேலை முடிஞ்சதும் போயிடுவேன்.. இந்த வேலையை மட்டும் செய்ய மாட்டேன் – ஓய்வு பற்றி விராட் கோலி பேச்சு

மேலும் அவர்கள் தங்களை தாங்களே உயர்த்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சிறப்பாக விளையாடும் பொழுது கவனிக்க வேண்டிய சக்தியாக இருக்கிறார்கள். தற்போது அவர்கள் வேகத்தை இழந்து இருக்கிறார்கள். நிச்சயம் இதை மீட்டு எடுத்துக் கொண்டு வருவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.