இந்தியா உலகக் கோப்பையை வெல்ல அதிகம் நெருங்கிடுச்சு.. கோலிக்கு இதை செய்யுங்க போதும் – பிரையன் லாரா கோரிக்கை

0
85
Virat

நேற்று இந்திய அணி டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ் ஹர்திக் பாண்டியா சிறப்பாக இருந்தார்கள். பந்துவீச்சில் எல்லோருமே சிறப்பாக செயல்பட்டிருந்தார்கள். இந்த நிலையில் கவலை அளித்து வரும் விராட் கோலியின் பேட்டிங் குறித்து லெஜெண்ட் பிரையன் லாரா முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்து இருக்கிறார்.

இந்திய அணி நேற்றைய போட்டியில் டாஸ் வென்று தைரியமாக முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆனாலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணிக்கு சிறந்த தொடக்கத்தை கொடுக்கவில்லை. ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பங்களிப்பில் இந்தியா நேற்று வெற்றி பெற்றது.

- Advertisement -

துவக்க ஆட்டக்காரராக வந்த ரோகித் சர்மா ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். ஆனால் நின்று விளையாடிய விராட் கோலி 24 பந்துகள் சந்தித்து 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரால் ஐபிஎல் தொடர் போல சரளமாக பேட்டிங் செய்ய முடியவில்லை.

மேலும் விராட் கோலி நேற்று ரஷித் கான் பந்துவீச்சை தாக்கி விளையாட நினைத்து முக்கியமான நேரத்தில் விக்கெட்டை பறி கொடுத்தார். இது விராட் கோலி மூன்றாவது வீரராக வந்திருந்தால் அந்த இடத்தில் அவர் அடிப்பதற்கு சென்று விக்கெட்டை கொடுத்திருக்க மாட்டார். அவருடைய ரோலில் இரட்டை மனநிலை இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசி இருக்கும் பிரையன் லாரா கூறும்பொழுது “விராட் கோலி 24 பந்துகளுக்கு 24 ரன்கள் எடுத்தார். இது மிகவும் குறைவானது என்று நீங்கள் கூறலாம். ஆனால் இதில் முக்கியமான விஷயம் அவர் களத்தில் நேரம் செலவிட்டார் என்பதுதான். இந்தியா இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு ஒரு படி இன்னும் நெருங்கி விட்டது. விராட் கோலி தன் வலிமையிலிருந்து இன்னும் வலிமைக்கு செல்ல போகிறார் என்று நான் நினைக்கிறேன்.

இதையும் படிங்க : பும்ராகிட்ட இந்த ஒரு விஷயத்தை கோச் பேசமாட்டார்.. அவர கவனிச்சா பிரஷர்தான் வரும் – அக்சர் படேல் பேட்டி

அவர் கரீபியன் தீவுகளில் விளையாடப் போகிறார். அவர் தைரியமாக சென்று சிறப்பாக விளையாடப் போகிறார். அவர் சிறப்பாக வரும் பொழுது கதை வேறு மாதிரியாக இருக்கும். எனவே தற்பொழுது அவருடன் அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உலகக் கோப்பையில் இன்னும் நிறைய ஆட்டங்கள் எங்கு இருக்கின்றன. அவர் நிச்சயம் சிறப்பாக வருவார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -