டி20 உலக கோப்பையில்.. கேப்டனாக கம்மின்ஸ் ஏன் இல்லை.. பின்னணியில் என்ன நடந்தது? – பிரட் லீ பேச்சு

0
128
Cummins

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியை மிட்சல் மார்ஸ் கேப்டனாக வழிநடத்தினார். அதே சமயத்தில் ஆசஸ் டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர்களை ஆஸ்திரேலிய அணிக்காக கேப்டனாக பாட் கம்மின்ஸ் வென்றிருந்தார்.எனவே அவர் டி20 உலக கோப்பையில் ஏன் கேப்டனாக ஆஸ்திரேலியா அணிக்கு இல்லை என்பது குறித்து பிரட் லீ பேசியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் கடந்த ஒரே ஆண்டில் இரண்டு உலகக் கோப்பைகளை வென்றார். இதன் காரணமாக அவரே தொடர்ந்து டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணிக்கு மிட்சல் மார்ஸ் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். அணியில் ஒரு வீரராக பாட் கம்மின்ஸ் விளையாடினார். மேலும் எதிர்பார்த்ததை விட டி20 உலகக்கோப்பையில் அந்த வடிவத்தில் சிறப்பாகவே அவர் செயல்பட்டது.

இருந்தபோதிலும் ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தொடர்ந்து தோற்று அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. தற்போது ஆஸ்திரேலிய முன்னாள் நட்சத்திர வீரர் பிரட் லீ இதற்கு பின்னால் என்ன நடந்திருக்கும்… என்பது குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து பிரட் லீ கூறும் பொழுது “நான் அந்த ஆஸ்திரேலிய அணியில் இல்லாததால் அது குறித்து கருத்து கூறுவது மிகவும் கடினமான ஒன்று. கம்மின்ஸ் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியா அணிக்கு ஏன் கேப்டனாக வரவில்லை என்பதும் புரியவில்லை. அவர்கள் வேறு வழியில் செல்ல விரும்புகிறார்களா என்பதும் புரியவில்லை. அவர்கள் இளம்வீரரை புதியவரை கேப்டனாக கொண்டு வரவும், கம்மின்ஸ் பணிச்சுமையை குறைக்கவும் நினைத்திருக்கலாம்.

இதையும் படிங்க : பும்ரா சிறப்பாக இருக்க காரணம் யார் தெரியுமா?.. அவர் இப்படிப்பட்ட பவுலர் தான் – இந்திய பவுலிங் கோச் சிறப்பு பேட்டி

ஆனால் எனக்குத் தெரிந்ததெல்லாம் நீங்கள் ஒரு கேப்டனை தேர்ந்தெடுத்தால் அவரை 100% ஆதரிக்க வேண்டும். ஒரு கேப்டனால் தனியாக போட்டியை வெல்ல முடியாது. எல்லோரும் சேர்ந்து ஒத்துழைத்தால்தான் வெல்ல முடியும். ஆனாலும் கம்மின்ஸ் ஒரு கேப்டனாக சிறப்பான வேலையை செய்திருக்கிறார். மேற்கொண்டு இந்த விஷயத்தில் எனக்கு எதுவும் தெரியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -