இந்திய கிரிக்கெட்

உண்மை அஸ்வின் பேசும்போது வெளிவரும்.. அவர் இதுல விரக்தி அடைஞ்சுட்டாரு – பிரட் லீ பிராட் ஹேடின் பேச்சு

இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் பிரட் லீ மற்றும் பிராட் ஹேடின் இருவரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். மேலும் உடனுக்குடன் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து வெளியேறுவதாகவும் கூறியிருந்தார்.

யூகங்களை உருவாக்கிய அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வினின் இந்த திடீர் முடிவு பல யூகங்களுக்கு வழி வகுத்திருக்கிறது. கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் அணி தேர்வில் அவர் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், இதன் காரணமாகவே அவர் மேற்கொண்டு அணியில் இருக்க விரும்பாமல் வெளியேறிவிட்டார் என்றும் பேசப்படுகிறது.

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பற்றி கூறிய பொழுது அவர் ஏற்கனவே இந்த முடிவை எடுத்து விட்டதாகவும் ஆனால் தான் சமாதானப்படுத்தி இரண்டாவது டெஸ்டில் விளையாட வைத்ததாகவும் கூறி இருந்தது இன்னும் யூகங்களுக்கு வலு சேர்க்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களும் தங்களுடைய சந்தேகத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வில் முன் வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

அவர் பேசினால் உண்மை வரும்

இது குறித்து பிரட் லீ கூறும் பொழுது “கடைசியாக ஒரு சுழல் பந்துவீச்சாளர் ஆஸ்திரேலியாவில் வைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது இங்கிலாந்தின் கிரேம் ஸ்வானாக இருக்கலாம். இதற்கடுத்து ஆஸ்திரேலியாவில் வைத்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றிருக்கிறார். அணி நிர்வாகம் மேற்கொண்டு அவர் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறி இருக்கலாம். இதன் காரணமாகவே அவர் தன்னுடைய சொந்த முடிவில் ஓய்வை அறிவித்திருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : அஸ்வின் எடுத்தது தவறான முடிவு.. இப்படி நீங்க செஞ்சிருக்க கூடாது.. காரணம் இருக்கு – கவாஸ்கர் விமர்சனம்

ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் கூறும் பொழுது “அஸ்வினுக்கு பேச வாய்ப்பு கிடைக்கும்போது பல உண்மைகள் இதில் வெளிவரும். முதல் மூன்று போட்டிகளில் மூன்று ஸ்பின்னர்களை பயன்படுத்தியதில் அவருக்கு விரக்தி ஏற்பட்டிருக்கலாம். என்னை பொறுத்தவரையில் அவர் இந்த விளையாட்டின் சிறந்த மாணவராக இருந்தார். அவர் எப்போதும் கற்றுக் கொள்வதற்கு ஆர்வமாக இருந்தார். அவர் மிகச் சிறந்த வீரர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by