இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக பிரெண்டம் மெக்கல்லம் நியமிக்க வாய்ப்பு

0
95
Brendon McCullum England Coach

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் இங்கிலாந்து அணி அரையிறுதிப் போட்டி வரை முன்னேறி அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. உலகக் கோப்பை டி20 தொடருக்கு பின்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் நடைபெற இருக்கும் நேரத்தில் தற்போது இங்கிலாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் பதவி ஏற்கப் போகிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -
இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளர்

பல ஆண்டுகள் கழித்து முதல் முறையாக 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி ஐசிசி உலக கோப்பை தொடரை வென்று புதிய சாதனை படைத்தது. அதன் பின்னர் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிக சிறப்பாகவே விளையாடி வந்தது.

தற்பொழுது கூட ஐசிசி தரவரிசை புள்ளி பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் இங்கிலாந்து அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை தேடி வந்த விஷயம் நமக்கு முன்பே தெரியும். அதன்படி இங்கிலாந்து அணிக்கு இனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான புதிய தலைமை பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

- Advertisement -

பிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து அணி 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது நம் அனைவருக்கும் தெரியும். அதேபோல கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அவரது தலைமையிலான கொல்கத்தா அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. பிரண்டன் மெக்கல்லம் ஒருவேளை இங்கிலாந்து அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றால் அவரது தலைமையிலான இங்கிலாந்து அணி எப்படி விளையாட போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.