ஆஸ்திரேலிய அணிக்கு பெருத்த அடி; கடைசி இரண்டு டெஸ்டிலிருந்து டேவிட் வார்னர் விலகல்!

0
274

காயம் காரணமாக கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் டேவிட் வார்னர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து விட்டன. கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணி முன்னணி வீரர்கள் தொடர்ச்சியாக காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி வருகின்றனர்.

- Advertisement -

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது சிராஜ் வீசிய பந்து வார்னரின் தலையில் பலமாக பட்டது. அதன் பிறகு கையில் மூட்டு பகுதியிலும் பந்து பட்டது. இதன் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடவில்லை. மாற்று வீரராக மேட் ரென்ஷா பிளேயிங் லெவனில் எடுத்து வரப்பட்டார்.

இந்நிலையில் வார்னருக்கு கையின் மூட்டு பகுதி எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காயம் குணமடைவதற்கு காலதாமதம் ஆகும் என்று அணியின் மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். ஆகையால் டெஸ்ட் தொடரின் மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் இருந்தும் வார்னர் விலகி இருக்கிறார்.

நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளில் வார்னர் மொத்தம் 26 ரன்கள் மட்டுமே அடித்து மோசமான பார்மை தொடர்ந்து வந்தார். ஆனாலும் வார்னர் போன்ற அனுபவம் மிக்க வீரர் துவக்கத்தில் இல்லாதது. அந்த அணிக்கு பின்னடைவை தந்திருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட், காயம் இன்னும் குணமுடியாததால் நாடு திரும்பியுள்ளார். மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்ச்சல் ஸ்டார்க் உடல்நிலை குறித்தும் தற்போது வரை தகவல்கள் சாதகமாக வரவில்லை. அவரும் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருப்பாரா? மாட்டாரா? என்று சந்தேகங்கள் நிலவி வருகிறது.

ஆஸ்திரேலியா அணி தங்களது முன்னணி வீரர்கள் இல்லாமல் திணறி வருவது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தெளிவாக தெரிந்தது. அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அது நீடிக்கும் என்றவாறே தகவல்கள் வருகிறது.