கபில்தேவ் ரெக்கார்டை உடைத்து.. 201* ரன்னில் மேக்ஸ்வெல் படைத்த 10 தனித்துவ மெகா சாதனைகள்!

0
10614
Maxwell

நடப்பு உலகக்கோப்பை தொடர் ஒவ்வொரு வாரத்திலும் சுவாரசியத்திலும் விறுவிறுப்பிலும் பரபரப்பிலும் அடுத்தடுத்த கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது!

இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 292 ரன்கள் இழப்பை ஆஸ்திரேலியா அணி துரத்தும் பொழுது, 91 ரன்கள் 7 விக்கெட் என்று இருந்து, மேக்ஸ்வெல்லின் காட்டடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றதன் மூலம், 10 அசத்தல் சாதனைகள் உருவாகி இருக்கிறது.

- Advertisement -

இன்றைய போட்டியில் ஆறாவது பேட்ஸ்மேனாக வந்து மேக்ஸ்வெல் 128 பந்துகளைச் சந்தித்து ஆட்டம் இழக்காமல் 201 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார்.

இதன் மூலம் இலக்கை துரத்தும் பொழுது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த ஒரே பேட்ஸ்மேன் என்கின்ற அபூர்வ சாதனையை படைத்திருக்கிறார். இத்தோடு சேர்த்து உலகக் கோப்பை வரலாற்றில் ரன்னை துரத்தும் பொழுது அதிக ரன் குவித்தவர் என்ற சாதனையும் சேர்ந்திருக்கிறது. இதற்கு முன் இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டாரஸ் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக 158 ரன்கள் எடுத்திருந்தார்.

- Advertisement -

இந்த இரட்டை சதத்தின் மூலமாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இரட்டை சதம் அடித்த ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் என்கின்ற சாதனை வந்திருக்கிறது. இதற்கு முன்பு பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஷேன் வாட்சன் 185* ரன்கள் அடித்திருந்தது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் அதிகபட்ச ஒரு நாள் கிரிக்கெட் ரன்னாக இருந்தது.

இதற்கு அடுத்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் என்கின்ற சாதனையும் சேர்ந்திருக்கிறது. இதற்கு முன்பாக டேவிட் வார்னர் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 178 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

பேட்டிங்கில் ஆறாவது இடத்தில் உலகக்கோப்பையில் வந்து 1993 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் கபில்தேவ் 175 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது. தற்பொழுது ஆறாவது இடத்தில் ஆட்டம் இழக்காமல் 201 ரன்கள் எடுத்து உலகக்கோப்பையில் மேக்ஸ்வெல் இதை முறியடித்து இருக்கிறாறார்.

மேலும் பேட் கம்மின்ஸ் உடன் இணைந்து எட்டாவது விக்கெட் 202 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார். இதுவே ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டாவது விக்கெட் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும். இதற்கு முன்பாக தென்னாப்பிரிக்காவின் ஜஸ்டின் கெம்ப் ஆண்ட்ரூ ஹால் 138 ரன்கள் எடுத்தது சாதனையாக இருக்கிறது.

மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் பேட்டிங் வரிசையில் ஐந்து மற்றும் அதற்கு கீழாக வந்து அதிக சதங்கள் அடித்தவராக மேக்ஸ்வெல் இருக்கிறார். அவர் மூன்று சதங்கள் அடித்து இருக்கிறார்.

மேலும் இரட்டை சதம் இதுவரையில் அடித்ததில் துவக்க ஆட்டக்காரராக இல்லாமல் இருப்பது மேக்ஸ்வெல் மட்டுமே என்கின்ற தனி சாதனையும் வருகிறது. மேலும் பேட்டிங்கில் ஆறாவது இடத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுதான். மேலும் அணியில் மற்றவர்கள் 30 ரன்கள் கூட தாண்டாத பொழுது, ஒரு தனி நபர் அடித்த அதிக ரன்கள் இதுதான். இப்படி மொத்தம் 10 தனித்துவ சாதனைகளை மேக்ஸ்வெல் படைத்திருக்கிறார்!

- Advertisement -