ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் பிராட் ஹாக் சச்சின் டெண்டுல்கரின் அருகில் விராட் கோலி ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் செல்வது மிகவும் கடினம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பொதுவாக உலக கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் ஓய்வுக்குப் பிறகு, அவர் படைத்துள்ள சாதனைகளில் பெரிய சாதனைகளை ஒருவர் முறியடிக்க வேண்டும் என்பதே கிடையாது, அடிப்பதற்கான வாய்ப்பில் இருந்தாலே அவர் சிறந்த வீரராக தான் இருக்க முடியும் என்பது உண்மையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் சச்சினின் ஒரு சாதனைக்கு அருகில் விராட் கோலியால் செல்லவே முடியாது என பிராட் ஹாக் கூறியிருக்கிறார்.
விராட் கோலியின் 113 டெஸ்ட்கள்
தற்பொழுது விராட் கோலி 113 டெஸ்ட்கள் விளையாடி 8,848 ரன்கள் எடுத்திருக்கிறார். அதே சமயத்தில் சச்சின் டெண்டுல்கர் ஒட்டுமொத்தமாக 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 ஆயிரத்து 921 ரன்கள் எடுத்திருக்கிறார். விராட் கோலிக்கும் சச்சினுக்கும் இடையே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ரன்கள் பாதிக்கு பாதி வித்தியாசம் இருக்கிறது.
ஒரு கட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் செய்துள்ள அதிக சதங்கள் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளது போல, டெஸ்டில் சச்சின் படித்துள்ள சாதனைகளையும் விராட் கோலி முறியடிப்பார் என 2019 ஆம் ஆண்டு வாக்கில் பலரும் கூறி வந்தார்கள். ஆனால் அங்கிருந்து விராட் கோலிக்கு பேட்டிங்கில் சரிவு உண்டானது. இந்த நிலையில்தான் விராட் கோலியால் சச்சினின் சில சாதனைகளை நெருங்க முடியாது என்று கூறும் அளவுக்கு வந்திருக்கிறது.
விராட் கோலியால் நெருங்க முடியாது
இதுகுறித்து பிராட் ஹாக் கூறும் பொழுது “விராட் கோலி இப்பொழுது சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்துள்ள அதிக ரன்கள் பக்கம் வருவார் என்று நான் நினைக்கவில்லை. அதன் அருகில் கூட அவரால் வர முடியாத நிலைமை தான் இருக்கிறது. அதற்கான வேகத்தை அவர் எப்பொழுதோ இழந்துவிட்டார். பல ஆண்டுகளாக அந்த வேகம் இல்லாமல் தான் இருந்து வருகிறார். அவருக்கு இப்பொழுது 10 டெஸ்ட் போட்டிகள் கிடைத்து இருக்கிறது. இதையும் பயன்படுத்துவாரா இல்லை கைவிடுவாரா? என்று தெரியவில்லை”
இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட்.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு.. 37 வயது ஸ்பின் பவுலருக்கு அழைப்பு.. புதிய மாற்றங்கள்
“எனவே ஜோ ரூட் 146 டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்கள் எடுத்திருக்கிறார். சச்சின் எடுத்துள்ள ரங்களை வைத்து பார்க்கும் பொழுது அவருக்கு இன்னும் ஒரு 64 டெஸ்ட் போட்டிகளில் ஒரு 4000 ரன்கள் தேவைப்படுகிறது. ஜோ ரூட் இந்த சாதனையை செய்வதற்கு அருகில் செல்ல முடியும் என்று நினைக்கிறேன். மேலும் இந்த சாதனையை முறியடிப்பதற்கு அவர் மிகவும் அமைதியாக இருந்து சாதிப்பார் என்று நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.