இங்கிலாந்து டெஸ்ட்.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு.. 37 வயது ஸ்பின் பவுலருக்கு அழைப்பு.. புதிய மாற்றங்கள்

0
3193
Muhammed Riswan and Babar azam

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரில் முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பாகிஸ்தான் அணியில் கவனிக்கத்தக்க விதமாக 37 வயதான பந்துவீச்சாளர் ஒருவர் அணியில் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலமாக தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருகிறது. ஒரு நாள் உலகக் கோப்பைக்கு பிறகு கடைசியாக நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறிய பாகிஸ்தான் அணி அதற்கு பிறகு வங்கதேச அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை தழுவி வரலாறு காணாத விமர்சனத்தை சந்தித்தது.

இந்த சூழ்நிலையில் தற்போது அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை தனது சொந்த மண்ணில் விளையாட இருக்கிறது. இதற்கான அணி தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக 37 வயதான இடது கை சுழற் பந்துவீச்சாளர் நோமன் அலி மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

நோமன் அலி கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காயமடைந்த குர்ரம் ஷாசாத்திற்கு பதிலாக தற்போது அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவர் பாகிஸ்தானுக்காக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 33.53 சராசரியில் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் வங்கதேச டெஸ்டில் இடம் பெற்று இருந்த கம்ரான் குலாம் மற்றும் முகமது அலி ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

ஷான் மசூத் தலைமையில் களமிறங்க உள்ள பாகிஸ்தான் அணி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடித்த பெரும்பாலான வீரர்களே இந்த தொடரிலும் இடம்பெற்று இருக்கிறார்கள். இதன் முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் ஏழாம் தேதி முல்தானில் உள்ள முல்தான் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.

இதையும் படிங்க:இரானி கோப்பை 2024.. இடம் கிடைக்காத சஞ்சு சாம்சன்.. ரசிகர்கள் மகிழ்ச்சி.. காரணம் என்ன.?

இங்கிலாந்து அணிக்கு எதிராக களம் இறங்க உள்ள 15 பேர் கொண்ட பாகிஸ்தான் டெஸ்ட் அணி :

முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி: ஷான் மசூத் (கேட்ச்), சவுத் ஷகீல் (விசி), அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசம், மிர் ஹம்சா, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, நோமன் அலி, சைம் அயூப், சல்மான் அலி. ஆகா, சர்ஃபராஸ் அகமது, ஷஹீன் ஷா அப்ரிடி.

- Advertisement -