“இந்தியா சேவாக்கையும் நாங்க ஹைடனையும் கூட்டிட்டு வந்தா தாங்குவிங்களா.. தோத்ததே இதனால்தான்” – பிராட் ஹாக் பேச்சு

0
860
Hogg

இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாட வந்திருந்தது. சில நாட்களுக்கு முன்பு தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் தோற்று, ஒட்டுமொத்தமாக நான்குக்கு ஒன்று என தொடரை இழந்து நாடு திரும்பி இருக்கிறது.

இங்கிலாந்து அணி இந்த தொடரில் முதல் போட்டியில் வென்ற பொழுது, இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியில் இருந்து வரும் ஒரு அணி டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்தப் போகிறது என்று பலரும் பேசினார்கள்.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து அணி விளையாடும் அதிரடியான முறை மற்றும் இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது எல்லாம் சேர்ந்து, இங்கிலாந்து இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்று விடுமோ என்று பலரும் சந்தேகப்படவே செய்தார்கள்.

இந்த நிலையில்தான் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இளம் வீரர்களை மிகச் சிறப்பாக வழி நடத்தி அடுத்தடுத்து நான்கு போட்டிகளை வென்று, இந்திய கிரிக்கெட்டில் மறக்க முடியாத ஒரு தொடர் வெற்றியாக மாற்றி இருக்கிறார். இந்தத் தொடரில் இருந்து சர்பராஸ் தான், துருவ் ஜுரல், ஆகாஷ் தீப் போன்ற இளம் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறார்கள்.

இங்கிலாந்து அணியின் இந்த தொடரின் தோல்வி குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிராட் ஹக் இங்கிலாந்து அணியை மிகவும் காட்டமாக விமர்சித்து தள்ளி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இங்கிலாந்து நீங்கள் உங்கள் சொந்த விஷயத்தைப் பற்றி மட்டும் கவலைப்படுங்கள். அடுத்த அணிகளின் விஷயம் பற்றி பார்க்காதீர்கள். ஜெய்ஸ்வால் தைரியமாக அதிரடியாக சென்று உங்கள் பந்துவீச்சை முற்றிலும் அழித்துவிட்டார்.

ஜெய்ஸ்வால் அவர் விளையாடும் விதத்தில் விளையாடுகிறார். நீங்கள் விளையாடுவதை பார்த்து கிடையாது. நீங்கள் அப்படி சொன்னால், அவர்கள் திருப்பி நீங்கள் சேவாக்கை பார்த்து விளையாடுவதாக சொல்வார்கள். உங்கள் துவக்க ஆட்டக்காரர்கள் ஹைடன் மற்றும் லாங்கர் இருவரையும் பார்த்து விளையாடுவதாக நாங்கள் சொல்வோம். இப்படி நீங்கள் மற்ற அணிகள் மீது கவனம் செலுத்திய போதே தோற்று விட்டீர்கள்.

இதையும் படிங்க : “2021 அப்பவே விராட் கோலிக்கு தோனி பிளான் பண்ணிட்டாரு.. சிஎஸ்கே-கிட்ட கஷ்டம்” – மேத்யூ ஹைடன் பேட்டி

பாஸ்பால் வேலை செய்கிறதா என்கின்ற பேச்சு இருக்கிறது. இது முற்றிலும் புதிய பிரான்ட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உயிர்ப்பு கொடுத்து இருக்கிறது. ஆனால் வெற்றி சதவீதத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இது கிரிக்கெட்டின் வேறு பிராண்ட் ஆனால் அதே கதைதான்” என்று கூறியிருக்கிறார்.