“2021 அப்பவே விராட் கோலிக்கு தோனி பிளான் பண்ணிட்டாரு.. சிஎஸ்கே-கிட்ட கஷ்டம்” – மேத்யூ ஹைடன் பேட்டி

0
170
Hayden

இந்த வருடம் ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் மகேந்திர சிங் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிக் கொள்ள இருக்கின்றன.

இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் மோதிக்கொள்ள இருக்கையில், இதற்கு முன்பாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர்கள் களத்தில் குதித்து இருக்கிறார்கள். ஏற்கனவே சமூக வலைதளத்தில் இரு அணிகளின் ரசிகர்களும் நிறைய ட்ரோல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

- Advertisement -

இரண்டு பெரிய நட்சத்திரங்களின் அணிகள் முதல் போட்டியில் மோதிக்கொள்ள இருக்கின்ற காரணத்தினால், வழக்கமாக ஐபிஎல் தொடருக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இந்த முறை சற்று அதிகமாகவே இருக்கிறது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்சல் மற்றும் இந்திய உள்நாட்டு அன்கேப்டு வீரர் சமீர் ரிஸ்வி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கேமரூன் கிரீன் போன்ற புதிய சுவாரசியமான வீரர்கள் வாங்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த வீரர்களின் கலவையுடன் இந்த இரு அணிகளின் செயல்பாடு எப்படி இருக்கும் என, இரு அணிகளின் ரசிகர்களும் சுவாரசியத்தோடு காத்திருக்கிறார்கள்.

பொதுவாகவே சென்னை சேப்பாக்கம் மைதானம் பெரிய அளவில் ஸ்கோர் அடிக்க முடியாத மைதானம். காரணம் இங்கு பந்து கொஞ்சம் திரும்பியும் மெதுவாகவும் வரும். இதன் காரணமாகவே தன் சொந்த மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து வலிமையாக இருந்து வருகிறது. இந்த மைதானத்தின் ஆடுகளத்திற்கு ஏற்றவாறு வீரர்கள் வாங்கப்படுகிறார்கள். இந்த முறையும் சுழல் பந்து வீச்சுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பஞ்சம் கிடையாது.

- Advertisement -

அதே சமயத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 30 போட்டிகளில் 985 ரன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மட்டும் குவித்து இருக்கிறார். ஆனால் சேப்பாக்கத்தில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 110 என மிகவும் குறைவாகவே இருக்கிறது. இந்த மைதானத்தில் அவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பெரிய ரெக்கார்டுகள் இல்லை.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறும்பொழுது “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலிக்கு நல்ல சாதனைகள் இருக்க செய்கிறது. ஆனால் 2021 ஆம் ஆண்டு முதல் பவர் பிளேவில் விராட் கோலிக்கு தோனி வித்தியாசமான ஒரு திட்டத்தை வகுத்து வைத்திருக்கிறார். கடந்த ஐந்து முறை மோதியதில் விராட் கோலி மூன்று முறை பவர் பிளேவில் ஆட்டம் இழந்து இருக்கிறார்.

இதையும் படிங்க : “ஐபிஎல் இல்ல டி20 உலககோப்பையும் ரிஷப் பண்ட் விளையாடுவார்.. ஆனா இத செஞ்சா போதும்” – ஜெய் ஷா அறிவிப்பு

ஆனாலும் இதில் ஒன்று நிச்சயம். இது ஒரு பிளாக்பஸ்டர் மோதல். விராட் கோலி இந்த ஆண்டு அனைத்து போட்டிகளின் போதும் கொண்டாடப்படுவார். ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 111 ஆவரேஜ் 30தான்” எனக் கூறியிருக்கிறார்.