நான் 130ல பவுலிங் பண்றேன், உம்ரான் 150ல பணறாரு.. எங்களுக்குள்ள பார்ட்னர்ஷிப் எப்படி இருக்கும்? – அர்ஷ்தீப் சிங் ஓபன் டாக்!

0
205

உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்திப் சிங் இருவரின் பவுலிங் பார்ட்னர்ஷிப் எப்படிப்பட்டது? என்பதற்கு அர்ஷ்திப் சிங் பதிலளித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இளம் பந்துவீச்சாளர்கள் அர்ஷதிப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் இருவரும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

- Advertisement -

உம்ரான் மாலிக், அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகம் ஆகினார். அர்ஷ்திப் சிங் ஆசியகோப்பைக்கு முன்பாக அறிமுகமாகி சர்வதேச டி20 போட்டிகளில் அசத்தி வருகிறார்.

இருவருக்கும் ஒரு நாள் போட்டியில் முதல்முறையாக வாய்ப்பு கிடைத்தது. உம்ரான் மாலிக் அதை சிறப்பாக பயன்படுத்தி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷதிப் சிங்குக்கு எதிர்பார்த்தவாறு அமையவில்லை.

முதல் ஒருநாள் போட்டியில் 8.1 ஓவரில் 68 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினார். டி20 மனநிலையிலிருந்து இன்னும் அர்ஷ்தீப் சிங் வெளியே வர வேண்டும் என்று பலரும் மர்சித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் உம்ரான் மாலிக் ஒரு முனையிலும் அர்ஷ்தீப் சிங் மறுமுனையிலும் பந்து வீசுவது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சின் புதிய அத்தியாயமாக தெரிகிறது என்று கூறுகின்றனர். ஏனெனில் வலது கை பந்துவீச்சில் உம்ரான் 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறார். இடதுகை பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 130-140 கிலோ மீட்டர் வேகத்தில் ஸ்விங் செய்கிறார்.

முற்றிலும் மாறுபட்ட இருவேறு பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு எதிரணி பேட்ஸ்மேன்கள் நிச்சயம் தயாராக இருக்க மாட்டார்கள். இந்த வகையில் இருவரின் பார்ட்னர்ஷிப் இந்தியாவின் எதிர்காலத்திற்கு நன்றாக அமையும் என்று பலரும் கணித்து வருகின்றனர். இதற்கு அர்ஷ்தீப் சிங் என்ன கூறுகிறார் என்பதை நாம் பார்ப்போம்.

“நான் பந்துவீசும் பொழுது எனக்கு முந்தைய ஓவரை பார்ட்னர் எப்படி வீசுகிறார் என்பதை பார்ப்பேன். அவர் ரன்களை கட்டுப்படுத்தினால் நானும் ரன்களை கட்டுப்படுத்தி அதை விக்கட் ஆக மாற்றுவதற்கு முயற்சிப்பேன். கூடுதலாக பேட்ஸ்மேன்களை திணறடிக்க முயற்சித்து குறைந்தபட்சம் அடுத்த ஓவரிலாவது விக்கெட் வீழ்த்த பார்ப்பேன். இதுதான் எப்போதும் எனது திட்டமாக இருக்கும்.

உம்ரான் மாலிக் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பந்து வீசுவதில் நிச்சயம் எனக்கு ஆர்வமாக இருக்கிறது. ஒரு முனையில் அவர் 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவார். அதை எதிர்கொண்டு முடிப்பதற்குள் மறுமுனையில் நான் 130 கிலோமீட்டர் வேகத்தில் வீசுதால், பேட்ஸ்மேன்கள் தவறு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

பேட்டிங்கில் எப்படி பார்ட்னர்ஷிப் முக்கியமோ, பவுலிங் பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியம். வரும் போட்டிகளில் எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்படும் என்று நம்புகிறேன்.” என்றார்.