“தங்கம் மாதிரி பவுலருங்க.. பேட்ஸ்மேன்கள் நாங்க எதாவது இவங்களுக்கு செய்யனும்!” – ரோகித் சர்மா வெற்றிக்கு பின் பேச்சு!

0
3422
Rohit

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நேராக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக மாறி இருக்கிறது. அதே சமயத்தில் நடப்பு உலகக் கோப்பையில் அரையிறுதி வாய்ப்பு இழந்து வெளியேறும் முதல் அணியாக இங்கிலாந்து மாறியிருக்கிறது.

- Advertisement -

டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 101 பந்துகளில் 87 ரன்கள் கொண்டு வந்தார். இவருக்கு அடுத்து சூரியகுமார் யாதவ் இறுதிக் கட்டத்தில் 49 ரன்கள் எடுத்தார். இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் சேர்த்தது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் வந்த இங்கிலாந்து அணியை இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அதிரடியாக முடக்கிப் போட்டார்கள். 129 ரன்களுக்கு இங்கிலாந்து அணி சுரண்டது. சமி நான்கு விக்கெட் பும்ரா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசும்பொழுது “இந்த போட்டி நாங்கள் நிறைய குணாதிசயங்களை வெளிப்படுத்திய போட்டியாக அமைந்திருக்கிறது. அனுபவம் வாய்ந்த வீரர்கள் அனைவரும் சரியான நேரத்தில் எழுந்து நின்று போட்டியை வென்று கொடுத்திருக்கிறார்கள்.

- Advertisement -

முதல் ஐந்து ஆட்டங்களில் இரண்டாவதாக பேட் செய்து தற்பொழுது முதலில் பேட் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்களுக்கு தனிப்பட்ட வகையில் போட்டி எப்படி சென்றது என்பதை பார்க்கும் பொழுது சவாலாக இருந்தது.

இந்த ஆடுகளத்தில் ஏதோ இருக்கிறது என்று எங்களுக்கு தெரியும். மேலும் எங்களுக்கு பந்து வீச்சில் அனுபவமும் இருக்கிறது. எனவே நாங்கள் ஒரு நல்ல ஸ்கோரை பெற விரும்பினோம். ஆனால் நாங்கள் பேட்டிங்கில் நல்ல விதமாக செயல்படவில்லை. பவர் பிளேவில் மூன்று விக்கெட்டை இழப்பது சரியல்ல.

நாங்கள் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை உண்டாக்கி இருக்க வேண்டும். ஆனால் என்னுடைய விக்கெட் உட்பட எல்லோருமே பார்ட்னர்ஷிப்பை உருவாக்காமல் தவறாகவே ஆட்டம் இழந்தோம். ஒட்டுமொத்தமாக நாங்கள் ஒரு 30 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம்.

பந்துவீச்சில் இப்படிப்பட்ட ஒரு ஸ்கோரை எல்லா நேரத்திலும் பாதுகாக்கும் போட்டியை பார்க்க முடியாது. எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள்.

நாங்கள் ஒரு சமநிலை கொண்ட அணியை பெற்றுள்ளோம். எங்களிடம் இரண்டு நல்ல ஸ்பின்னர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இப்படியான பந்துவீச்சாளர்கள் இருக்கும் பொழுது, பேட்டர்கள் அவர்களுக்கு வேலை கொடுத்து மேஜிக்கை கொண்டு வர வைப்பது முக்கியம்!” என்று கூறியிருக்கிறார்!