சூரியகுமார் ரஷித் கான் இருவரும் அதிரடி பேயாட்டம் ; முடிவில் குஜராத்தை வீழ்த்தியது மும்பை; புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியது!

0
610
Ipl2023

ஐபிஎல் 16ஆவது சீசனில் இன்று பிளே ஆப் சுற்றிற்கான முக்கியமான போட்டியில் மும்பை அணி மும்பை வான்கடே மைதானத்தில் குஜராத் அணியை எதிர்கொண்டது!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். மும்பை அணி முதல் விக்கட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷான் 31, ரோஹித் சர்மா 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். அடுத்து வந்த வதேரா 15 ரன்கள் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து நெருக்கடியான நேரத்தில் சூரியகுமார் யாதவும் இந்தத் தொடரில் புதிதாக வாய்ப்பு பெற்ற விஷ்ணு வினோத்தும் இணைந்து சிறப்பாக விளையாடி 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். விஷ்ணு வினோத் 30 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டிம் டேவிட் ஐந்து ரன்கள் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார்.

ஒரு முனையில் நிலைத்து நின்ற சூரியகுமார் யாதவ் மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் அடித்து நொறுக்கி தனது முதல் ஐபிஎல் சதத்தை 49 பந்துகளில் நிறைவு செய்தார். இதில் 11 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடக்கம். சூரியகுமார் யாதவ் 103 ரன்கள், கேமரூன் கிரீன் 2 ரன்கள் எடுத்து களத்தில் நிற்க இருபது ஓவர்கள் முடிவில் மும்பை அணி 218 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் ரசீத் கான் நான்கு ஓவர்களுக்கு 30 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி 103 ரன்களுக்கு 13.2 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

கில் 6, சகா 2, ஹர்திக் பாண்டியா 4, விஜய் சங்கர் 29, அபினவ் மனோகர் 2, டேவிட் மில்லர் 41, ராகுல் திவாட்டியா 14, நூர் அகமது 1 ரன்களில் ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு பிறகு ரஷித் தான் ஒரு அதிரடி கேமியோ ஆடி குஜராத் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். இறுதிவரை களத்தில் நின்ற அவர் 32 பந்துகளில் மூன்று பவுண்டரி 10 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் சேர்த்தார்.

ரஷித் கான் ஒன்பதாவது விக்கெட்டுக்கு அல்ஜாரி ஜோசப் உடன் இணைந்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார். ஒன்பதாவது விக்கட்டுக்கு அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஐபிஎல் தொடரில் இதுதான். அல்ஜாரி ஜோசப் ஆட்டம் இழக்காமல் ஏழு ரன்கள் எடுத்திருக்க, 20 ஓவர்கள் முடிவில் குஜராத் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது.

இதை அடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் 12ஆவது ஆட்டத்தில் ஏழாவது வெற்றியை மும்பை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 14 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. குஜராத், சென்னை முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. ராஜஸ்தான் 12 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் இருக்கிறது!