“இரு பங்காளி நானும் வரேன்”.. இந்தியாவுக்கு அடுத்து பாகிஸ்தானும் செமிபைனலில் தோல்வி.. யுஏஇ பைனல்!

0
2735
Pakistan

தற்போது 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர் யுனைடெட் அரபு எமிரேடில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் தந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வலிமை குறைவான யுஏஇ அணிகள் மோதி கொண்ட போட்டியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீசுவது என தீர்மானித்தது. அந்த முடிவு சரியானதாகவும் அமைந்தது.

முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணிக்கு ஆரியனாஸ் சர்மா 46, இதன் டிசோசா 37, அயான் அப்சல் கான் 55 என ரன்கள் எடுக்க, 47.5 ஓவரில் 193 ரன்களுக்கு யுஏஇ ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் உபைத் ஷா நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து சிறிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு மூன்றாவது வீரராக வந்த அசன் அவைஸ் 41, நான்காவது வீரராக வந்த சாட் பேக் 50 என அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, பாகிஸ்தான் அணி 49.3 ஓவரில் 182 ரன்களுக்கு சுருண்டது. 11 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ ஆச்சரியப்படுத்தும் வெற்றி பெற்றது.

இதன் காரணமாக அண்டர் 19 ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு பங்களாதேஷ் மற்றும் யுஏஇ அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன. வலிமை மிக்க அணிகளாக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு அணிகளும் அரையிறுதியில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியிருக்கின்றன.

இந்த தோல்வி பாகிஸ்தானை விட இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் ஆசியாவில் மிகப்பெரிய உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பை கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணி, ஆசிய அளவில் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாதது மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது!