வீடியோ.. வரலாற்றில் முதல் முறை.. மாயமான அம்பையர்.. போட்டி நிறுத்தம்.. ஆஸ்திரேலியா பாக் டெஸ்டில் விசித்திரம்.!

0
245

1998ல் சார்ஜாவில் நடைபெற்ற, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி இந்திய அணி விளையாடிக்கொண்டிருக்கும் போது, காற்றுடன் மணலும் சேர்ந்து வீசியதால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. இதைப்போல கிரிக்கெட் போட்டியில், மழை, போதிய வெளிச்சம் இன்மை, ரசிகர்களின் குறுக்கீடு, போன்ற பல வித்தியாசமான காரணங்களால் இடையூறுகளை சந்தித்துள்ளன.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 3வது நாளில், ஆஸ்திரேலிய அணி 6/2 என்ற நிலையில் இருக்கும்போது, ஒரு வினோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

- Advertisement -

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 5 நிமிட தாமதம் ஏற்பட்டது. அதற்கான காரணம் முதலில் வீரர்களுக்கு தெரியாத நிலையில், கள நடுவர்கள் மைக்கேல் கோஃப் மற்றும் ஜோயல் வில்சன் ஆகியோர் ஆட்டம் தாமதமானதற்கான காரணத்தை வீரர்களிடம் விளக்கினர்.

மூன்றாவது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் எம்சிஜியில் லிஃப்டில் சிக்கித் தவித்ததைத் தொடர்ந்து இந்த வித்தியாசமான நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையே மெல்போர்னில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டத்தின் போது மூன்றாவது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த், தனது மதிய உணவை சாப்பிட்ட பிறகு, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் லிஃப்டில் சிக்கிக்கொண்டார், இதனால் போட்டி, உணவு இடைவேளைக்குப் பிறகு கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் தாமதமானது.

- Advertisement -

ஆட்டம் தடைபட்டபோது, மூன்றாவது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த், காலி இருக்கையை காட்டப்பட்டது, அப்போது அதற்கான காரணங்களை வர்ணனையாளர்கள் விளக்கினர். இதைத்தொடர்ந்து ரிசர்வ் நடுவர், மூன்றாவது நடுவர் பணியை தற்காலிகமாக தொடர்வதற்கு சென்றதன் மூலம் ஐந்து நிமிட தாமதத்திற்கு பிறகு போட்டி தொடங்கப்பட்டது.

வர்ணனையாளர் மைக்கேல் வாகன் இந்த வினோதமான நிகழ்வு பற்றி பேசும்போது, ” கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே இதேபோல வித்தியாசமான காரணங்களால் நிறுத்தப்படுவதில் முதலிடம்” என்று கூறினார்.

மற்றொரு வர்ணனையாளரும் பாகிஸ்தான் வேகப்பந்து ஜாம்பவானுமான வாசிம் அக்ரம் தெரிவிக்கையில், “மூன்றாவது நடுவர் லிப்டில் சிக்கிக் கொண்டதால் ஆட்டம் தடைப்பட்டு தொடர்வது என்பது, சிறிய மழை தூறலுக்கு பிறகு, தற்போது மழையின் இடையூறு இல்லை, ஆட்டத்தை தொடரலாம் என்பது போல உள்ளது. மற்ற விளையாட்டுகளில், இதே போல காரணங்களால் தடைகள் ஏற்படுமா? இதற்கு முன்பு இதுபோன்ற நிகழ்வுகளை நான் பார்த்ததில் என்பதை ஒப்புக்கொள்கிறேன்” என்று மைக்கேல் வாகனிடன் சிரிப்புடன் பகிர்ந்து கொண்டார்.