இந்திய வீரர்கள் ஒருபோதும் என்னை ஒழுங்கான முடிவை கொடுக்க விட்டதே இல்லை – அம்பயர் நிதின் மேனன் அதிர்ச்சி பேட்டி!

0
2006

“இந்தியாவில் விளையாடும்பொழுது நட்சத்திர வீரர்கள் சிலர் சரியான முடிவுகளை எடுக்க விடாமல் அழுத்தம் கொடுப்பார்கள். இருப்பினும் நாம்தான் கட்டுக்கோப்பிலிருந்து நல்ல முடிவுகளை கொடுக்க வேண்டும்.” என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தபடி பேட்டியளித்துள்ளார் நடுவர் நித்தின் மேனன்.

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த காலங்களில் நடுவர்களின் முடிவு பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஆகையால் இனி அது நடந்துவிடக்கூடாது என்பதற்காக மூன்றாம் நடுவரை நிர்ணயித்து முடிவுகள் அவரிடம் செல்லும்படி ரிவியூ சிஸ்டம் கொண்டுவந்தது ஐசிசி.

- Advertisement -

மூன்றாம் நடுவர் பல்வேறு கோணங்களில் ரீ-ப்ளே பார்த்து முடிவுகளை அறிவிப்பார். முதலில் அவுட் கேட்பதற்கு மட்டும் மூன்றாம் நடுவரிடம் சென்ற முடிவுகள், சமீப காலமாக நோபல் மற்றும் ஒயிடுகள் ஆகியவற்றிற்கும் கேட்கலாம் என்கிற அளவிற்கு ஐபிஎல் போட்டிகளில் கொண்டுவரப்பட்டுள்ளது. இது களத்தில் இருக்கும் நடுவர்களை கூடுதல் அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்பதை களத்தில் வேலை பார்க்கும் நடுவர்கள் பலர் தங்களது பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த ஐசிசி பேனல் நடுவர் நித்தின் மேனன், சமீபத்திய பேட்டியில் இந்தியாவில் விளையாடும் பொழுது நட்சத்திர வீரர்கள் எந்த வகையில் அழுத்தம் கொடுப்பார்கள்? அந்த சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும்? என்கிற பல்வேறு கேள்விகளுக்கு பதில் கொடுத்திருக்கிறார்.

“சர்வதேச கிரிக்கெட்டில் அம்பயரிங் செய்வது அவ்வளவு எளிதல்ல. இந்தியாவில் கிரிக்கெட் என்பது மிகப்பெரிய ஆட்டம். ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். பலருக்கு கிரிக்கெட் உயிர். ஆகையால் அதுவே நமக்கு அழுத்தமாக இருக்கும்.

- Advertisement -

அதேநேரம் களத்தில் நட்சத்திர இந்திய வீரர்கள் அவுட் அல்லது நாட் அவுட் என்று கொடுக்கும் பொழுது பல வகைகளில் கேட்டு அழுத்தமும் கொடுப்பார்கள். இப்படிப்பட்ட சூழலில் மிகப்பெரிய அழுத்தம் நடுவரின் மீது விழும். மூன்றாம் நடுவருக்கு செல்லும்போதும் அழுத்தம் உச்சத்தில் இருக்கும்.

இந்த சூழல்களை கையாண்டு நாம் கட்டுக்கோப்பில் இருந்தால் மட்டுமே துல்லியமான முடிவுகளை கொடுக்க முடியும். இல்லையெனில் களத்தில் இருக்கும் வீரர்களின் தாக்கம் நம் மீது ஏற்பட்டு உரிய முடிவுகளை கொடுக்க முடியாமல் போகலாம். இந்த நிகழ்வுகள் இந்தியாவில் பலமுறை நடந்திருக்கிறது. நான் உணர்ந்திருக்கிறேன்.” என்று பேட்டி அளித்துள்ளார்.