அடுத்த சில நாட்களில் இந்தியா மற்றும் இலங்கையில் துவங்கி இருக்கும் டி20 உலக கோப்பையில் இந்திய பயிற்சியாளர் கம்பீருக்கு எது சவாலாக இருக்கும் என முன்னாள் பந்துவீச்சு பயிற்சி பயிற்சியாளர் பரத் அருண் கூறியிருக்கிறார்.
இந்திய அணி தற்போது டி20 வடிவத்தில் உலக சாம்பியனாக இருந்து வருகிறது. மேலும் இந்தியாவில் தொடர் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் உலக கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயமும் உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்த பொழுது இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த பரத் அருண் கம்பீர் பற்றியும் அவருக்கு உலகக் கோப்பையில் ஏற்பட இருக்கும் சவால் பற்றியும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பரத் அருண் பேசும் பொழுது “அவர் உங்களுக்கு உங்களை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதற்கு சந்தர்ப்பத்தை தருகிறார். கம்பீர் பற்றிய என் தனிப்பட்ட அனுபவம் என்னவென்றால் அவர் கடுமையான டாஸ்கை கொடுக்கக்கூடிய ஒரு மாஸ்டர். அவர் அதிலிருந்து மாற மாட்டார். அவர் உங்களுக்கு திட்டங்களை சரியாக கொடுப்பார். நீங்கள் அதை சரியாக செயல்படுத்த வேண்டும்”
“போட்டியின் போது பனிப்பொழிவு ஏற்படுவது பிரச்சினையாக இருக்கும். நாம் இதற்கு முதலில் தயாராக வேண்டும். எனவே நாம் ஈரமான பந்துடன் பயிற்சி செய்ய வேண்டும். சில பேட்ஸ்மேன்கள் ஈரமான பந்துடன் பயிற்சி செய்ய விரும்ப மாட்டார்கள். அவர்களுடைய பேட் சேதாரம் அடையும் என்பதுதான் இதற்கான காரணம்”
இதையும் படிங்க : கிரிக்கெட் முன்பு மாதிரி இல்லை.. அரசியலை வீரர்களே செய்கிறார்கள்.. இது மோசமானது – நாசர் ஹுசைன் வருத்தம்
“இது பந்து வீச்சாளர்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். ஒரு பந்துவீச்சு அணியாக இவர்கள் அனைவருமே ஈரமான பந்துடன் வேலை செய்ய வேண்டும். அவர்கள் பந்தை எப்படி கிரிப் செய்வது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுதான் கம்பீருக்கு பெரிய சவாலாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.