கழட்டி விடப்படும் பென் ஸ்டோக்ஸ்.. சிஎஸ்கே ரச்சின் ரவீந்தராவுக்கு குறி?.. வெளியாகி இருக்கும் பரபரப்பான தகவல்!

0
1084
IPL

அடுத்த வருடம் 2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு வீரர்களை விடுவிப்பது மற்றும் வீரர்களை மாற்றிக் கொள்வதற்கு கடைசி தேதியாக நவம்பர் 26ஆம் தேதியை ஐபிஎல் நிர்வாகம் கொடுத்து இருக்கிறது.

இந்த நிலையில் பத்து ஐபிஎல் அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை கழட்டி விட்டு, இல்லை தங்கள் அணியில் இருக்கும் வீரரை இன்னொரு அணிக்கு கொடுத்து அங்கிருந்து ஒரு வீரரை வாங்கிக் கொள்ளும் நடைமுறையை பின்பற்றி அணியை பலப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் வெளிநாட்டை சேர்ந்த சில இளம் வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். எனவே அவர்களை வாங்குவதற்காக, எல்லா ஐபிஎல் அணிகளும் சில வீரர்களை கழட்டி விட தயாராகி இருக்கின்றன.

இந்த வகையில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்தரா, ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட், இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மதுசங்கா, மேலும் தற்போது இலங்கை கேப்டன் விக்கெட் கீப்பர் குசால் மெண்டிஸ் போன்ற வீரர்களுக்கான தேவை ஐபிஎல் அணிகளுக்கு இருக்கிறது.

இந்த நிலையில் சிஎஸ்கே நிர்வாகம் கடந்த மினி ஏலத்தில் 16.25 கோடி கொடுத்து வாங்கிய இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்சை கழட்டிவிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. நம்பத் தகுந்த மிகப்பெரிய கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து வரும் இந்த தகவல் 100% உண்மையாக இருக்கவே வாய்ப்புகள் மிக அதிகம்.

- Advertisement -

அதே சமயத்தில் மகேந்திர சிங் தோனி இறுதியாக நவம்பர் 20ஆம் தேதி அதாவது உலகக் கோப்பை தொடர் முடிவடைந்த அடுத்த நாள் இது சம்பந்தமாக கலந்தாலோசித்து அறிக்கையை வெளியிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பென் ஸ்டோக்ஸ் காலில் அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறார். அவர் அடுத்த வருடம் ஐபிஎல் தொடருக்கு கிடைப்பாரா என்று தெரியாது. மேலும் அவருடைய பணத்திற்கு புதிய சில இளம் திறமைகளை வாங்க வேண்டிய தேவையில் சிஎஸ்கே இருக்கிறது. ஏனென்றால் அம்பதி ராயுடு இந்த வருடம் ஓய்வு பெற்றார். மகேந்திர சிங் தோனி அடுத்த வருடம் ஓய்வு பெறலாம். எனவே சிறந்த நீண்ட காலம் விளையாடும் இளம் வீரர்கள் சிஎஸ்கேவுக்கு தேவை.

இதுகுறித்து சிஎஸ்கே நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கும் பொழுது “பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து அணிக்கு கிடைப்பார் என்றால் அவரை நாங்கள் தவற விட மாட்டோம். ஆனால் அவர் அப்படி கிடைக்க மாட்டார் என்கின்ற காரணத்தினால், வருடத்திற்கு 16 கோடி கொடுப்பதற்கு நாங்கள் சில இளம் திறமைகளை வாங்க முடியும்!” என்று கூறி இருக்கிறார்.

நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்தராவை சிஎஸ்கே அணியால் வாங்க முடிந்தால், அவர் பென் ஸ்டோக்ஸ் இடத்தை மட்டும் அல்லாமல் அம்பதி ராயுடு இடத்தையும் நிரப்பக் கூடியவராக இருப்பார். எதிர்காலத்தில் அவர் சுரேஷ் ரெய்னா இடத்தில் தொடர்ச்சியாக சிஎஸ்கே அணிக்கு விளையாட கூடியவராக மாறலாம். எனவே சிஎஸ்கே இவருக்கு குறி வைத்திருக்கவே வாய்ப்புகள் மிக அதிகம்!