கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி அன்று மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து முடிந்தது. டி20 தொடரின் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 3-2 என்கிற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
அதேபோல 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரையும் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 கணக்கில் கைப்பற்றியது.
இங்கிலாந்து அணிக்கு ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ் 3 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 194 ரன்கள் குவித்தார். அதேபோல 3 போட்டிகளில் மொத்தமாக தொண்ணூற்றி ஒன்பது ஓவர்கள் வீசி மொத்தமாக 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஷஷ் டெஸ்ட் தொடர் விளையாடி முடித்த பின்னர் இரண்டு மாத இடைவெளியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடி இருக்கிறார்.
அதிக அளவில் வேலை போலவும் எடுத்துக் கொண்ட காரணத்தினால் அவருடைய இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. ஸ்கேன் செய்து பார்க்கையில் அவருக்கு சில மாதம் ஓய்வு தேவை என்று மருத்துவ குழு தரப்பில் கூறப்பட்டிருந்தது.
மே மாதம் மீண்டும் களமிறங்கும் பென் ஸ்டோக்ஸ்
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கலந்து இறங்காமல் பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்பொழுது கவனம் செலுத்த உள்ளதாக முன்பே அறிவித்திருந்தார். அதன்படி ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்திருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு இனி அடுத்து ஜூன் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கின்றது. அந்த தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதற்கிடையில் ஏப்ரல் 7 முதல் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் காலில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் தற்போது அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்பொழுது சமீபத்தில் எடுக்கப்பட்ட அவருடைய ஸ்கேன் ரிப்போர்டில் எந்தவிதமான பிரச்சனையும் தென்படவில்லை. அடுத்த மாதம் பென் ஸ்டோக்ஸ் விளையாட தயாராகி விடுவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
வொர்செஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக துர்ஹாம் அணைக்கு வருகிற மே மாதம் 5ஆம் தேதி போட்டி துவங்குகிறது.
கவுண்டி தொடரில் துர்ஹாம் அணிக்காக விளையாடும் பென் ஸ்டோக்ஸ் அனேகமாக மே 5ஆம் தேதி வொர்செஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் கலந்து இறங்கி விளையாடுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம். எனினும் இறுதி நேரத்தில் மீண்டும் ஸ்கேன் ரிப்போர்டில் அவருக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லாத பட்சத்திலும், அவருடைய உடல்நிலை சீராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவரால் மீண்டும் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.