படக்கூடாத இடத்தில் பந்துவீசிய மார்னஸ் லாபஸ்சாக்னே, தரையில் சுருண்டு விழுந்த பென் ஸ்டோக்ஸ் – வீடியோ இணைப்பு

0
702

இங்கிலாந்தில் தற்பொழுது கவுண்டி கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. துர்கஹாம் மற்றும் கிலாமோர்கன் அணிகள் தற்போது விளையாடிக் கொண்டிருக்கின்றன. போட்டியில் டாஸ் வென்ற கிலாமோர்கன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்சில் துர்ஹாம் அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடி வரும் கிலாமோர்கன் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் குவித்த நிலையில் விளையாடி வருகிறது. அந்த அணி 271 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

படக்கூடாத இடத்தில் அடிவாங்கிய பென் ஸ்டோக்ஸ்

துர்ஹாம் அணிக்காக பென் ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்சில் 82 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடினார். அவர் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் கிலாமோர்கன் அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபஸ்சாக்னே அவருக்கு எதிராக பந்து வீசினார்.

அவர் வீசிய பந்து திடீரென பவுன்ஸ் ஆகி பென் ஸ்டோக்ஸுக்கு படக்கூடாத இடத்தில் பட்டது(பென் ஸ்டோக்ஸ் இன் கீழ் இடுப்புப் பகுதியில் பலமாக பட்டது). அந்த இடத்தில் பந்து பட்ட மாத்திரத்தில் பென் ஸ்டோக்ஸ் ஒரு சில வினாடிகள் தரையில் படுத்து விட்டார். பின்னர் மெதுவாக எழுந்து தன்னை ஆசுவாசப்படுத்தி அங்குமிங்கும் ஓடி இயல்புநிலைக்குத் திரும்பினார்.அந்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் இரண்டின் புள்ளி பட்டியலில் தற்போது கிலாமோர்கன் அணி 74 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. அதே சமயம் துர்ஹாம் அணி 50 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.