இந்திய கிரிக்கெட்

அவமானமா இருக்கும்னு கோலிக்கு மெசேஜ் பண்ணேன்.. இனி இந்திய பிளேயர்ஸ் கிட்ட அதை பார்க்க முடியாது – பென் ஸ்டோக்ஸ் பேச்சு

விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை அறிவித்த பிறகு பென் ஸ்டோக்ஸ் விராட் கோலிக்கு தான் அனுப்பிய மெசேஜ் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் வருகின்ற ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. இதற்கு முன்பாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ள நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி குறித்து பேசி இருக்கிறார்.

பெரிய போட்டிகளின் வீரர் யார்?

கிரிக்கெட் உலகில் விராட் கோலியை பெரிய போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடிய பெரிய வீரர் என பல முன்னாள் வீரர்கள் கூறுவார்கள். அதே சமயத்தில் விராட் கோலி பெரிய போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடக்கூடியவர் பென் ஸ்டோக்ஸ் என கடந்த காலத்தில் கூறியிருக்கிறார். இருவருக்குள்ளும் சிறந்த நட்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விராட் கோலிக்கு எதிராக களத்தில் ஆக்ரோஷமாக விளையாடுவதை தான் தவற விடுவதாகவும், மேலும் அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதும் தான் அவருக்கு செய்த மெசேஜ் குறித்தும் பேசி இருக்கிறார்.

- Advertisement -

அவமானமாக இருக்கும்

இது குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசும்போது “அவருக்கு எதிராக விளையாட முடியாமல் போவது அவமானமாக இருக்கும் என அவருக்கு நான் மெசேஜ் அனுப்பினேன். ஏனென்றால் விராட் கோலிக்கு எதிராக விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக விளையாடுவதை விரும்புகிறோம். மைதானத்தில் எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான மனநிலை இருக்கிறது. உங்களுக்கு தெரியும் இது ஒரு போர். இதில் அவர் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தார். அவருக்கு இந்தியாவில் மட்டும் இல்லாமல் இங்கிலாந்திலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் இங்கிலாந்திலும் சிறப்பாக விளையாடியிருக்கும் தரமான வீரர்”

இதையும் படிங்க : 13 சிக்ஸர் 49 பந்து.. வெளுத்து கட்டிய மேக்ஸ்வெல் சூறாவளி பேட்டிங்.. அமெரிக்க டி20 தொடரில் அசத்தல்

“இந்தியா தவறவிடப்போவது விராட் கோலியின் சண்டை மனப்பான்மை, அவருடைய போட்டித் திறன் மற்றும் போட்டியில் வெல்ல வேண்டும் என்கின்ற அவரது ஆர்வம் ஆகியவற்றைதான். அவர் 18 ஆம் நம்பரை தன்னுடைய சொந்தமாக மாற்றிக் கொண்டார். தற்போது இந்திய அணிக்கு எதிராக விளையாடும் பொழுது அந்த எண் கொண்ட ஜெர்சியை யாருடைய முதுகிலும் பார்க்க முடியாது. விராட் கோலி நீண்ட காலமாக சிறப்பாக இருந்து வரும் வீரர்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by