தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் எம்எல்சி டி20 தொடரில் ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வெல் வாஷிங்டன் பிரீடம் அணிக்காக அதிரடி சதம் அடிக்க அந்த அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது.
இந்த ஆண்டு அமெரிக்க டி20 தொடர் கடந்த வாரத்தில் தொடங்கியது. இந்த நிலையில் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடி வரும் ஆஸ்திரேலியா நட்சத்திர பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் இந்த முறை அமெரிக்க டி20 தொடரில் அசத்தல் பேட்டிங்கை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேக்ஸ்வெல் ருத்ர தாண்டவம்
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் மிச்சல் ஓவன் அதிரடியாக 11 பந்தில் 32 ரன்கள், சிஎஸ்கே அணிக்காக விளையாடும் ரச்சின் ரவீந்திரன் 4 பந்தில் எட்டு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதைத்தொடர்ந்து பேட்டிங் வரிசையில் ஆறாவதாக வந்த மேக்ஸ்வெல் ஒரு முனையில் நின்று ருத்ர தாண்டவம் ஆடினார். மொத்தம் 49 பந்துகளை மட்டும் சந்தித்து விளையாடிய மேக்ஸ்வெல் இதில் 2 பவுண்டரிகள் மட்டும் அடித்து விட்டு 13 சிக்ஸர்களை நொறுக்கி தள்ளினார். இறுதிவரை களத்தில் நின்ற அவர் ஆட்டம் இழக்காமல் சதம் அடித்து 106 ரன்கள் குவித்தார். அவருடைய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் குவித்தது.
நைட் ரைடர்ஸ் படுதோல்வி
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு முதல் மூன்று பேட்ஸ்மேன்களான சுனில் நரைன், அலெக்ஸ் ஹெலஸ் மற்றும் உன்முக்த் சந்த் என மூவருமே ரன் ஏதும் எடுக்காமல் டாக் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சியை கொடுத்தார்கள்.
இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் தொடர் எங்களுக்கு முக்கியமே கிடையாது.. எங்க திட்டமே இப்போ அது மட்டும்தான் – இங்கி முன்னாள் வீரர்
அந்த அணிக்கு அதிகபட்சமாக சைப் பதார் 31 பந்தில் 32 ரன்கள், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 16 பந்தில் 23 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. வாஷிங்டன் பிரீடம் அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.






