“ஆஷஸ் டெஸ்ட் டீம் செலக்சன் குறித்த கேள்வி” – அஸ்வின் பற்றி பேசிய பென் ஸ்டோக்ஸ்!

0
12779

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தின் எட்க்பாஸ்டன் இன்று தொடங்கியது . ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பல பரிட்சை நடத்த இருக்கின்றன .

கிரிக்கெட் ஆரம்பித்த காலம் முதல் ஆஷஸ் டெஸ்ட் தொடர் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். பாரம்பரிய கிரிக்கெட்டில் இதை ஒரு முக்கியமான தொடராக உலக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பைக்கு இணையாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் தொடர் இதுவாகும் .

- Advertisement -

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் சமனில் முடிவடைந்தது . இரண்டு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்ற நிலையில் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது . இதனைத் தொடர்ந்து 2021 அஷஸ் தொடரை ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது .

தற்போது இங்கிலாந்து அணி பாஸ்பால் யுக்தியுடன் டெஸ்ட் போட்டிகளை ஆடி வருவதால் அந்த அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பாஸ் பால் யுக்தியை எப்படி கையாள்கிறது என்பதை பார்க்க உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் .

இந்தப் போட்டி துவங்குவதற்கு முன்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் அணி தேர்வு குறித்து பேசினார் . அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் ” இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் அனுபவம் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று கூறினார் . மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடரின் போது டேவிட் வார்னருக்கு எதிராக அவர் மிகச் சிறப்பாக பந்து வீசினார் . பத்து இன்னிங்ஸ்களில் ஏழு முறை டேவிட் வார்னரை ஆட்டமிழக்கச் செய்தார் . இந்த ஒரு காரணத்திற்காகவே அவரை அணியில் எடுக்கலாம்” என தெரிவித்தார் .

- Advertisement -

மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய அவர் ” இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் எனக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி என்னை ஆட்டம் இழக்க செய்வது போல் ஸ்டூவர்ட் பிராட் டேவிட் வார்னருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என தெரிவித்தார் . மேலும் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆண்டர்சன் இருவரும் இணைந்து பந்துவீச்சில் சேர்க்கின்ற பலம் எங்களைப் போன்ற ஒரு அதிரடியான அணிக்கு மிகவும் தேவை என தெரிவித்தார் .

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை பத்து முறைக்கு மேல் பென்ஸ் ஸ்டோக்சை அஸ்வின் ஆட்டம் விளக்கச் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதன் காரணமாகவே அவர் ஸ்டூவர்ட் பிராட் பற்றிய கேள்விக்கு அஸ்வினின் பெயரை குறிப்பிட்டு பதில் அளித்தார் . இங்கிலாந்து கேப்டனின் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ” டேவிட் வார்னர் கடந்த முறை செய்த தவறுகளை திருத்திக் கொண்டு நிச்சயமாக இந்த முறை சிறப்பாக விளையாடுவார் . அவர் சவால்களை சந்திக்க தயாராகவே இருக்கிறார் என தெரிவித்தார் . மேலும் இந்த முறை டேவிட் வார்னரை அதிரடியான வீரராக இங்கிலாந்து அணி சந்திக்கும் எனவும் தெரிவித்தார்.