நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முன்கூட்டியே டிராவில் போட்டியை முடித்துக் கொள்ளாதது பற்றி பென் ஸ்டோக்ஸ் களத்தில் பேசிய முறை தற்பொழுது பலராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று ஐந்தாவது நாளில் கடைசி செஷனில் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. கடைசி ஒரு மணி நேர போட்டி என்பது எதிரணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிராவில் முடித்துக் கொள்ள கேட்ட பொழுது ஜடேஜா சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு பெரிய சதங்கள்
இந்திய அணி இந்த போட்டியை டிரா செய்வதற்கு முதலில் கேஎல்.ராகுல் மற்றும் கேப்டன் கில் இருவரும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்கள். ஆனால் இவர்கள் இருவரும் ஐந்தாவது நாள் முதல் செஷனில் ஆட்டம் இழந்து விட்டார்கள். இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்று சதம் அடித்து போட்டியை டிரா செய்தார்கள்.
இந்த நிலையில் கடைசி ஒரு மணி நேரத்தில் ஸ்டோக்ஸ் டிரா செய்வதற்கு ஜடேஜாவிடம் கேட்டார். ஆனால் ஜடேஜா அதற்கு சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் “நீ புரூக் வந்து வீசி சதம் அடிக்க போகிறாயா?” என்று ஸ்டோக்ஸ் கோபமாக கேட்க, ” நீ யாரை வைத்து பந்து வீசப் போகிறாய் உன்னுடைய திட்டங்கள் என்ன என்பது குறித்து எனக்கு கவலை இல்லை, நான் என்னுடைய முறையில் தொடர்ந்து விளையாட போகிறேன்” என ஜடேஜா பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்குப் பிறகு பேசிய ஸ்டோக்ஸ்
அதே சமயத்தில் நேற்று போட்டி முடிந்த பிறகு பென் ஸ்டோக்ஸ் இந்த விஷயம் குறித்து பேசவில்லை. மேலும் முன்கூட்டியே டிராவில் முடித்துக் கொள்ள முயற்சி செய்தது ஏன் என்பது குறித்து கருத்து தெரிவித்தார். இது குறித்து ஸ்டோக்ஸ் பேசும்போது ” இந்திய பேட்ஸ்மேன்கள் வெளிப்படையாக நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடினார்கள். போட்டியில் முடிவு டிரா மட்டுமே என்கின்ற நிலைக்கு எடுத்துச் சென்றார்கள். அவர்கள் அற்புதமாக விளையாடி விட்டார்கள்”
இதையும் படிங்க : 425/4.. ஜடேஜா வாஷிங்டன் சுந்தர் சாதனை சதம்.. நம்ப முடியாத பேட்டிங்.. இந்தியா மாஸ் டிரா
“அதே சமயத்தில் இன்னும் ஒரு போட்டி எஞ்சி இருக்கும் நிலையில் என்னுடைய பெரிய வேகப்பந்து வீச்சாளர்களை காயமடைய வைக்க நான் விரும்பவில்லை. இதனால் அவர்களை பந்து வீசவைக்காமல் நான் புரூக் மற்றும் ரூட் இருவரையும் பந்து வீச வைத்தேன். ஏனென்றால் டாசன் நிறைய ஓவர்கள் வீசி சோர்வடைந்து விட்டார். இதன் காரணமாகவே கடைசி ஒரு மணி நேரத்தில் நான் எனது வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டு வரவில்லை” என்று கூறி இருக்கிறார்.






