425/4.. ஜடேஜா வாஷிங்டன் சுந்தர் சாதனை சதம்.. நம்ப முடியாத பேட்டிங்.. இந்தியா மாஸ் டிரா

0
172
Jadeja

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அபார சதத்தால் டிராவில் முடிவடைந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச இந்திய அணி 358 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து 311 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

அசத்திய நால்வர் கூட்டணி

இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு முதல் ஓவரின் ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் ஆட்டம் இழந்து நெருக்கடியை உண்டாக்கினார்கள். இதற்கு அடுத்து கேஎல்.ராகுல் 90 ரன் மற்றும் சுப்மன் கில் 103 ரன் என மொத்தம் 417 பந்துகளில் 188 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

இதைத்தொடர்ந்து அடுத்த ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் மிகவும் பொறுப்புடனும் அதே நேரத்தில் முன்னிலை பெறுவதற்கான ரன்களை எடுக்கவும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தார்கள்.

- Advertisement -

ஸ்டோக்ஸ் கோரிக்கை புறக்கணிப்பு

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் சதத்தை நெருங்கிய பொழுது ஆட்டத்தை டிராவில் முடித்துக் கொள்ள இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கேட்டார். ஆனால் களத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா டிரா செய்வதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தினார்கள்.

இதையும் படிங்க : 88 வருடங்கள்.. பிராட்மேனின் சாதனை உயரத்தை தொட்ட கில்.. கேப்டனாக மெகா ரெக்கார்டு.. இங்கிலாந்தில் அசத்தல்

இந்த நிலையில் இறுதியாக ஆட்டம் இழக்காமல் ரவீந்திர ஜடேஜா 107 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்கள் எடுத்திருந்த பொழுது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 425 ரன்கள் குவித்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பேட்டிங் வரிசையில் ஆறாம் இடத்துக்கு மேல் வந்து இங்கிலாந்தில் இரண்டு சதங்கள் அடித்த இந்திய வீரராக ஜடேஜாவும், தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை சேனா நாட்டில் அடித்த 26 இந்திய வீரராக வாஷிங்டன் சுந்தரும் சாதனை படைத்தார்கள்.

- Advertisement -