உலக கிரிக்கெட்

பாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்பி இருக்கணும்.. ஒரே ஒரு கேட்ச் பிடிக்காம அவமானம் ஆயிடுச்சு – நெதர்லாந்து வீரர் பேட்டி

நேற்று டி20 உலக கோப்பையின் முதல் போட்டியில் கேஸ் வாய்ப்பை தவறவிட்ட காரணத்தினாலே தாங்கள் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து விட்டோம் என்று நெதர்லாந்து வேகப்பந்துவீச்சாளர் பால் வான் மீக்கரன் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 147 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து கடைசி இரண்டு ஓவரில் 29 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதில் 19ஆவது ஓவரில் பாஹிம் அஷ்ரப் 24 ரன்கள் எடுக்க அந்த அணி எளிதாக இறுதி ஓவரில் வென்றது. ஆனால் இவருக்கு அதற்கு முன்னதாக ஒரு கேட்ச் வாய்ப்பை நெதர்லாந்து தவறவிட்டது.

பாகிஸ்தான் வெல்லவில்லை

பாகிஸ்தான் இந்திய அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. எனவே அவர்களுக்கு ரன் ரேட் மிகப் பெரிய அளவில் அடி விழும். இதனால் முதல் சுற்றில் மற்ற எல்லா அடிகளையும் பாகிஸ்தான் வெல்ல வேண்டும். ஒருவேளை நேற்று தோல்வி அடைந்து இருந்தால் முதல் போட்டியிலேயே வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமைதான் இருந்தது.

இதுகுறித்து பால் வான் மீக்கரன் கூறும்பொழுது ” நாங்கள் விரும்பிய ரண்களைப் பெறவில்லை என்று நினைக்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானுக்கு நல்ல தொடக்கம் கிடைத்ததற்கு பிறகு நாங்கள் போராடிய விதம் எப்பொழுதும் நாங்கள் விட்டுத் தர மாட்டோம் என்கின்ற எங்கள் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. இதற்காக உண்மையில் பெருமைப்படுகிறேன். நேற்று அவர்கள் வெல்லவில்லை நாங்கள்தான் தோற்று விட்டோம்”

- Advertisement -

வீட்டுக்கு அனுப்பி இருக்க வேண்டும்

“நான் மிகத் தெளிவாக ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெல்லவில்லை; நாங்கள் தான் எங்கள் போட்டியை தோற்று விட்டோம். நேற்று போட்டிகள் நாங்கள் பந்துவீச்சில் மிகச் சிறப்பானவர்களாக இருந்தோம். நாங்கள் வெற்றி பெறுவதற்கு தகுதியானவர்கள்”

இதையும் படிங்க : சும்மா காமெடி பண்ணாதீங்க சூர்யான்னு சொன்னேன்.. ஆனா அப்போ அது உண்மைன்னு தெரியல.. டி20 WC குறித்து சிராஜ்

“கிரிக்கெட்டில் கொஞ்சம் புத்திசாலித்தனம் இருக்கக்கூடிய யாருக்கும் நாங்கள் விட்ட ஒரு கேட்ச் வாய்ப்பில்தான் தோற்றோம் என்று தெரியும். நாங்கள் எங்களிடமே தோற்று விட்டோம். நாங்கள் பாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்பி இருக்க வேண்டும். அது ஒரு அவமானம் ஆனால் அதுதான் நிலைமை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts