” பாகிஸ்தானி என்பதால் சூப்பர் கிங்ஸ் அணியில் எடுக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்” – சமி அஸ்லம் சிஎஸ்கே-வின் டிஎஸ்கே அணியில் இடம் கிடைத்தது பற்றி பேட்டி!

0
972

அமெரிக்காவின் மேஜர் கிரிக்கெட் லீக் டி20 தொடர் இன்று தொடங்கியது இதன் முதல் போட்டியில் டெக்ஸா சூப்பர் கிங்ஸ் அணியும் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டி எஸ் கே அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது .

மொத்தம் ஆறு அணிகள் கலந்து கொள்ளும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியையும் சேர்த்து 19 ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன . இந்தப் போட்டி தொடர்களில் உலகெங்கிலும் இருந்து சர்வதேச வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர் .

- Advertisement -

இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் அணிகளில் மூன்று அணிகளை ஐபிஎல் அணிகள் வாங்கி இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது . சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கி இருக்கிறது . கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணியை வாங்கி உள்ளது . மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி எம் ஐ நியூயார்க் என்ற அணியை வாங்கி இருக்கிறது . மேலும் டெல்லி கேப்பிட்டல் போன்ற அணிகள் மற்ற அணிகளிடமிருந்து ஒரு பங்கை வாங்கி இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது .

இதனால் மேஜர் லீக் t20 தொடரானது ஒரு மினி ஐபிஎல் ஆகவே பார்க்கப்படுகிறது . இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான சதாப்கான், ஹாரிஸ் ரவுப் மற்றும் இமாத் வாசிம் போன்ற வீரர்களும் மேஜர் லீ கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ளனர். ஹாரிஸ் மற்றும் சதாப்கான் சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அணிக்காகவும் இமாத் வாசிம் சியாட்டில் ஆர்காஸ் அணிக்காகவும் விளையாடுகின்றனர் .

இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய வீரர்களும் இந்தத் தொடரில் அமெரிக்காவின் உள்நாட்டு வீரர்களாக பங்கேற்றுள்ளனர் . அவர்களில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சாமி அஸ்லம் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் . ஐபிஎல் அணி தன்னை தேர்ந்தெடுக்காது என்று நினைத்ததாகவும் ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் இந்தப் பாரபட்சமும் இன்றி தங்களை நடத்துவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் .

- Advertisement -

இதுகுறித்து டான் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ” பிஎஸ்எல் போட்டித் தொடர்களில் பங்கேற்காத வீரர்கள் அமெரிக்காவில் வந்து கிரிக்கெட் விளையாடி வருகின்றோம் . பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு போதுமான அளவு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில்லை . அதன் காரணமாகவே பெரும்பாலான உள்நாட்டு வீரர்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி மற்ற நாடுகளில் குடியேறுவதை விரும்புகின்றனர்” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” சிஎஸ்கே அணி நிர்வாகத்தால் நான் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று நினைக்கவில்லை . ஐபிஎல் உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்று ஒரு வதந்தி நிலவி வருகிறது . ஆனால் இங்கு உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது . சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒரு மிகச் சிறந்த தொழில் முறை அணி நிர்வாகமாக இருக்கிறது . இந்த அணியின் மேலாண்மை மற்றும் அணியில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது . சிஎஸ்கே அணி தான் இந்த முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது . அதே தலைமையின் கீழ் தற்போது இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனக் கூறியிருக்கிறார் சமி அஸ்லம்.