டேவிட் வார்னரின் மகள்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்து நெகிழ்ந்து போன அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள்

0
134
David Warner Daughters

ஐபிஎல் தொடர் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணியில் சந்தீப் வாரியர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு கொரனோ தொற்று அதன் காரணமாக நேற்று நடைபெற்ற இருந்தால் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி தள்ளி வைக்கப்பட்டது. இன்று நடக்க இருந்த மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

ஐதராபாத் அணியில் இருக்கும் விருத்திமான் சஹா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என செய்தி வந்தது. எனவே ஐதராபாத் அணியில் இருக்கும் அனைவரும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். அதேபோல டெல்லி அணியில் அமித் மிஸ்ராவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் சூழ்நிலை கையை மீறி செல்லும் வேளையில் பிசிசிஐ நடப்பு ஐபிஎல் தொடரை தற்போதைக்கு தள்ளிவைத்துள்ளது. ஐபிஎல் தொடர் முழுமையாக இந்த ஆண்டு நடத்தப்படும் போகலாம் என்கிற வாய்ப்பும் உள்ளதாக வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

தனது மகள்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வார்னர்

இந்தியாவில் கொரோனா காரணமாக நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கும் வேளையில், டேவிட் வார்னரின் மூன்று மகள்கள் அவருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளனர். அந்த குறுஞ்செய்தியை மூவரும் சேர்ந்து ஒரு பேப்பரில் அழகாக தங்கள் கைப்பட எழுதி அனுப்பியுள்ளனர்.

அந்த பேப்பரில், நாங்கள் உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம் டாடி. உங்களைப் பிரிந்து எங்களால் இருக்க முடியவில்லை. சீக்கிரமாக வீட்டிற்கு வந்து விடுங்கள் டாடி என்று எழுதியதோடு கீழே அன்புடன் இவி, இண்டி & இஸ்லா (வார்னருடைய மூன்று மகள்களின் பெயர்) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தனது மகள்கள் தனக்கு அனுப்பிய அந்த குறுஞ்செய்தியை வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று மதியம் பகிர்ந்தார். அதைக் கண்ட அனைத்து ரசிகர்களும் நெகிழ்ந்து போயுள்ளனர்.