“இந்தியாவை ஜெயிக்கிறது பெரிய ராக்கெட் சயின்ஸ் கிடையாது” – இங்கிலாந்து கோச் மெக்கலம் அதிரடி பேட்டி

0
495
McCullam

இங்கிலாந்து தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் மதிப்பு வாய்ந்த ஒன்றாக கவுரவமாக பார்க்கும் அணியாக இருந்து வந்தது. ஏனென்றால் கிரிக்கெட்டை அந்த வடிவத்தில் கண்டறிந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

மேலும் கிரிக்கெட்டை கண்டபடி விளையாடாமல், கிரிக்கெட் மரபு படி விளையாடியவர்கள். இதன் காரணமாகவே நவீன கிரிக்கெட்டில் அவர்களால் பலகாலமாக உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்து வந்தது.

- Advertisement -

இடைப்பட்ட காலத்தில் ஜோ ரூட் தலைமையில் இங்கிலாந்து டெஸ்ட் அணி வெளிநாடு உள்நாடு என வித்தியாசம் இல்லாமல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து பெரிய விமர்சனங்களையும் அதனால் சந்தித்தது.

வெள்ளைப் பந்து கிரிக்கெட் வடிவத்தில் மீண்டு வந்து ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரை கைப்பற்றியது போல, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏதாவது செய்ய முயற்சித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ், தலைமை பயிற்சியாளராக ப்ரண்டன் மெக்கலம் ஆகியோரைக் கொண்டு வந்தது.

இந்த ஜோடி டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட் போல பேட்டிங் மட்டுமில்லாமல் பந்துவீச்சு, பீல்டிங் என எல்லாவற்றிலும் அணுக முடிவு செய்தது. இதற்காக உள்நாட்டில் வழக்கமாக போடப்படும் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை மாற்றி, பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டன.

- Advertisement -

இதற்குப் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி அதிரடியாக விளையாடி, மற்ற அணிகளின் டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறையை உடைத்து, மேலும் மன வலிமையையும் உடைத்து வெற்றி பெற ஆரம்பித்தது. தற்பொழுது இந்தியாவிலும் இதே முறை தொடருமா என்கின்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்தத் தொடர் குறித்து பேசி உள்ள இங்கிலாந்து பயிற்சியாளர் ப்ரண்டன் மெக்கலம் “இந்தத் தொடரில் நாங்கள் சோதிக்கப்பட போகிறோம். எங்களுடைய அணுகுமுறைகள் சவால் செய்யப்பட இருக்கிறது. இதை நான் மிகவும் விரும்புகிறேன். நாங்கள் ஒரு அணியாக எந்த அளவுக்கு இருக்கிறோம்என்பதை நாங்கள் தெரிந்து கொள்வதற்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு.

மொத்த அணியினரையும் ஒரே மன நிலைக்குள் கொண்டு வர வேண்டும். மேலும் அவர்கள் விளையாட செல்லும் பொழுது 10 அடி உயரம் உள்ளவர்கள், குண்டு தொலைக்காத ஆடை அணிந்திருப்பவர்கள் போலவும் செல்வார்கள். பின்னர் அவர்கள் தங்களுடைய கிரிக்கெட் அடிப்படை கிரிக்கெட் விஷயத்தை பயன்படுத்தி விளையாட அவர்களுடைய கிரிக்கெட் திறமைகள் வெளியில் வரவேண்டும். மேலும் அவர்கள் அந்தந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை சீக்கிரத்தில் மதிப்பிட வேண்டும்.

இந்தத் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் 20 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும். மேலும் பேட்டிங்கில் அவர்களை விட ஒரு ரன் கூடுதலாக எடுக்க வேண்டும்.இது ராக்கெட் சயின்ஸ் கிடையாது. ஆனால் இது விளையாட்டின் நுணுக்கமாக இருக்கும். இப்பொழுது திட்டத்தில் ஓட்டுவது, எப்பொழுது அதில் இருந்து விலகுவது என்பது சுவாரசியமான ஒன்றாக அமையும்” என்று கூறியிருக்கிறார்