“பாகிஸ்தானை வீழ்த்தி.. இந்தியாவை விட்டு வெற்றிகரமா வெளிய போகனும்!” – பட்லர் அதிரடி ஆன பேச்சு

0
7633
Buttler

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று நெதர்லாந்து அணியை எதிர்த்து இங்கிலாந்து விளையாடிய போட்டியில் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து பேட்டிங்கில் டேவிட் மலான் மற்றும் வோக்ஸ் இருவரும் அரை சதம் அடித்தார்கள். அபாரமாக விளையாடிய ஸ்டோக்ஸ் சதம் அடித்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து பந்துவீச்சில் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு நெதர்லாந்து அணியை 179 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தார்கள். ஆதில் ரஷீத் மற்றும் மொயின் அலி இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

எட்டாவது போட்டியில் விளையாடிய இங்கிலாந்துக்கு இது இரண்டாவது வெற்றியாகும். அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன் டிராபி தொடரில் விளையாட தகுதி பெறுவதற்கு இந்த வெற்றி இங்கிலாந்துக்கு மிக முக்கியம்.

மேலும் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து விளையாட இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி அடிப்படையில் இங்கிலாந்துக்கும், நடப்பு உலகக் கோப்பை தொடர் அரையிறுதி அடிப்படையில் பாகிஸ்தானுக்கும் அந்த போட்டி மிக முக்கியமானது.

- Advertisement -

எனவே இரு அணிகளுமே வெற்றிக்கு கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகம் கிடையாது. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு பின்பு இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “ஆமாம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியமானது. இந்த உலகக் கோப்பையின் முழுப் பயணத்திலும் நாங்கள் விரும்பியபடி விளையாடவில்லை. எனவே சரியான செயல் திறனை வெளிப்படுத்தி வெற்றிகரமாக இந்தியாவை விட்டு வெளியேற விரும்புகிறோம். ஆக இந்த காரணத்தினால் இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

பாகிஸ்தான் அணியும் சிறந்த அணி. அவர்களுக்கு எதிராக ஒரு நல்ல ஆட்டத்தை எதிர்பார்க்கிறோம். நாம் இன்று சிறப்பாக செய்துள்ள விஷயங்களில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான நம்பிக்கையை பெறலாம்!” என்று கூறியிருக்கிறார்!