“ரோகித்த கேப்டன் ஆக்குங்க!” – ஏலத்தில் ரசிகருக்கு அலட்சியமா பதில் சொன்ன ஆகாஷ் அம்பானி!

0
1723
MI

அடுத்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் தற்பொழுது நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது. ஏறக்குறைய 10 அணிகளுமே தற்பொழுது வலிமையான இடத்தில்தான் இருக்கின்றன. இம்பேக்ட் பிளேயர் விதி இருக்கின்ற காரணத்தினால், எந்த ஒரு அணியும் மற்றொரு அணியை வெல்லக்கூடிய இடத்தில் இருக்கின்றன.

ஆனாலும் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகள் மிகவும் வலிமையாக தற்போது காணப்படுகிறது. ஏலத்தில் இவர்களுக்கு யார் தேவையாக இருந்தார்களோ அவர்களை மிகச்சரியாக வாங்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

நடைபெற்று முடிந்த இந்த மினி ஏலம் இரண்டு விதத்தில் சிறப்புமிக்கதாக மாறுகிறது. இதுவரை ஐபிஎல் ஏலம் வெளிநாட்டில் நடந்ததில்லை. தற்பொழுது துபாயில் நடத்தப்பட்டது. மேலும் ரசிகர்களின் முன்னிலையில் நடத்தப்பட்ட முதல் ஐபிஎல் ஏலமாக இந்த ஏலம் அமைகிறது.

ஒட்டுமொத்தமாக நடந்து முடிந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் ஏலக்குழு மிகச் சிறப்பாகவே செயல்பட்டு தேவையான அனைத்து வீரர்களையும் வாங்கி, மிக வலிமையான அணியாக தற்பொழுது உருவெடுத்து இருக்கிறது.

ஆனாலும் கூட மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நீடிப்பதில் விருப்பமில்லை. மீண்டும் ரோகித் சர்மா இந்த அணிக்கு கேப்டனாக வருவதே சரி என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இளம் மும்பை இந்தியன்ஸ் ரசிகர் ஒருவர் இன்று ஏலம் நடந்த வளாகத்திலேயே தன்னுடைய ஆதங்கத்தை, மும்பை இந்தியன்ஸ் அணி முதலாளி ஆகாஷ் அம்பானியிடம் நேரடியாக வெளிப்படுத்தி விட்டார்.

குறிப்பிட்ட அந்த ரசிகர் ரோகித் சர்மாவை மீண்டும் கேப்டன் ஆக்குங்கள் என்று ஆகாஷ் அம்பானியை நோக்கி சத்தம் எழுப்பினார். இதற்கு ஆகாஷ் அம்பானி வெகு அலட்சியமாக “அவர் நிச்சயம் பேட் செய்வார்” என்று கூறியிருக்கிறார். கேப்டன் ஆக்குங்கள் என்பதற்கு, “அவரை நாங்கள் பேட்ஸ்மேனாகவாவது வைத்திருக்கிறோம். அதற்கு சந்தோஷப்படுங்கள்” என்பது போல அவரது பதில் அமைந்தது, ரசிகர்களை மீண்டும் கோபப்படுத்தி இருக்கிறது!