அஸ்வின் ஸ்ரீகாந்துக்கு கம்பீர் தந்த பதிலடி சரிதான்.. பிசிசிஐ வெளியிட்டுள்ள தகவல்.. என்ன நடந்தது?

0
72
Gambhir

இந்திய வீரர் ஹர்ஷித் ராணா மீதான முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்கு கம்பீர் தந்த பதிலடி சரியானது என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணிக்கு மூன்று வடிவத்திலும் ஹர்ஷித்ராணா தேர்வு செய்யப்பட்டு வருவது விமர்சனங்களை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிலையில் அவர் குறித்து சமூக வலைதளத்தில் முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இதுகுறித்து கம்பீர் மிகக் காட்டமான முறையில் பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

அஸ்வின் கம்பீர் விமர்சனம்

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டது குறித்து அஸ்வின் சந்தேகம் எழுப்பியிருந்தார். தேர்வுக் குழுவினர் எந்த அடிப்படையில் இவரை தேர்வு செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், ஒரு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதை வைத்து ஹர்ஷித் ராணா தொடர்ந்து வாய்ப்புகள் பெறுவதாகவும் விமர்சனம் செய்திருந்தார்.

மேலும் இந்திய முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஹர்ஷித் ராணா களத்தில் ஆக்ரோஷமாக காட்டிக் கொள்ளும் நாடகத்தில் தான் கவனம் செலுத்துகிறார் எனவும், அவருக்கு திறமை இல்லை எனவும் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருந்தார்.

- Advertisement -

கம்பீர் பதிலடி சரி

இந்த நிலையில் ஒரு இளம் வீரரை பொறுப்புடன் விமர்சிக்க வேண்டும் எனவும், தங்களின் யூடியூப் சேனல் பெரிய அளவில் வரவேண்டும் என்பதற்காக கண்டதையும் பேசக்கூடாது எனவும் கம்பீர் ஹர்ஷித் ராணா குறித்த இந்திய முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து இருந்தார்.

இதையும் படிங்க : ஹர்ஷித் ராணாவை குறி வைக்கிறது வெட்கக்கேடானது.. என்னை என்ன வேணாலும் செய்யுங்க – கம்பீர் கோபம்

இது குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா கூறும் பொழுது “கம்பீர் சொல்லி இருப்பது சரியானது தான். வீரர்கள் குறித்து யாருக்காவது ஏதாவது சந்தேகம் இருந்தால், அதை பொறுப்புடன் செய்ய வேண்டும். இல்லையென்றால் அது வீரர்களின் தன்னம்பிக்கையை மன உறுதியை சீரழித்து விடும். எனவே விமர்சிப்பவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விமர்சிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -