விராட்கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலக நாங்கள் காரணமா? – பிசிசிஐ பொருளாளர் அதிரடி

0
88
Arun dhomal

இந்திய அணியின் ரன் மெசினும், இந்திய டெஸ்ட் அணியின் மிக வெற்றிக்கரமான கேப்டனுமான விராட்கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஏழு மாதங்கள் ஆகிவிட்டது. தற்போது மூன்று வடிவ கிரிக்கெட்டிற்கும் இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருக்கிறார்!

கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு அடுத்து டி20 கேப்டன் பொறுப்பை விராட்கோலி இராஜினாமா செய்தார். இதற்கடுத்து விராட்கோலியை ஒருநாள் போட்டி இந்திய கேப்டன் பொறுப்பில் இருந்தும் பிசிசிஐ-ஆல் விடுவிக்கப்பட்டார். மேலும் விராட்கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிக்கொண்டார்!

- Advertisement -

இந்தக் காலக்கட்டத்தில் விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதிற்கு, பிசிசிஐ-ன் செயலாளர் ஜெய்ஷா, தலைவர் சவுரவ் கங்குலி ஆகியோரே காரணம் என்று பரவலாகப் பேசப்பட்டது. விராட்கோலியும் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து தன்னை பிசிசிஐ நீக்கயதிற்கு முன்பாகத் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினால் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலக வேண்டுமென்று விராட்கோலியிடம் முன்பே தெரிவிக்கப்பட்டது என்று கங்குலி தரப்பில் கூறப்பட்டது.

இன்று இதற்குப் பதிலளிக்கும் விதமாக பிசிசிஐ-ன் பொருளாளர் அருண் துமல் பதிலளித்திருக்கிறார். அதில் அவர் “பாருங்கள் விராட்கோலி சாதாரண வீரர் கிடையாது. அவர் இந்திய கிரிக்கெட்டிற்காக நிறைய செய்திருக்கிறார். அவரை பிசிசிஐ ஓரங்கட்டுகிறது என்று தொடர்ந்து செய்திகள் ஊடகங்களில் வருகிறது. இது எங்களைப் பாதிக்காது. அணியின் தேர்வை நாங்கள் தேர்வாளர்களிடம் விட்டுவிடுகிறோம். விராட்கோலியைத் தேர்வு செய்வதும் செய்யாததும் தேர்வாளர்களின் பொறுப்பு” என்றார்!

மேலும் பேசிய அவர் “கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது அது அவரது தனிப்பட்ட முடிவு. அவர்தான் கேப்டனாக தொடர விரும்பவில்லை என்று எங்களிடம் கூறினார். நாங்கள் அவரது முடிவை மதித்தோம். பிசிசிஐ-யில் உள்ள ஒவ்வொருவரும் மதிக்கும் அளவிற்கு இந்திய கிரிக்கெட்டிற்கு நிறைய செய்துள்ளார் விராட்கோலி. அவர் மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்புவதை நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்” என்றும் தெரிவித்தார்!

- Advertisement -