நம்ம பிளேயர்ஸ நினைச்சா பெருமையா இருக்கு.. ஈகோ பாக்காம இத செய்யறாங்க – பிசிசிஐ ஜெயிஷா புகழாரம்

0
59

இந்தியாவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற உள்நாட்டு டி20 வடிவ கிரிக்கெட் தொடரான சையது முஸ்தாக் அலி டிராபி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா சீனியர் வீரர்களின் செயல்பாடு குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சையது முஸ்தாக் அலி டிராபி கிரிக்கெட் தொடர்

இந்தியாவின் இளம் திறமையான வீரர்களின் திறமைகள் ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களின் மூலம் வெளி வருகிறது. இதில் முக்கிய உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சையது முஸ்தாக் அலி டிராபி கிரிக்கெட் தொடர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலமாகவும் திறமையான இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு பெறுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தற்போது நடைபெற்று வரும் சையது முஸ்தாக் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற முன்னணி வீரர்கள் இந்த தொடரில் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர். இவர்கள் போன்ற சீனியர் வீரர்கள் பங்கு பெறுவதன் மூலமாக இளம் வீரர்கள் நிறைய அனுபவம் மற்றும் போட்டிகளை அணுகும் திறன் போன்ற பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது. அவர்கள் அடுத்தடுத்த தொடர்களில் சிறப்பாக செயல்படவும் இந்த விஷயம் ஒரு முக்கிய காரணியாக மாறுகிறது.

- Advertisement -

சீனியர் வீரர்களை பார்ப்பதில் மகிழ்ச்சி

ஸ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரில் மூன்று போட்டிகளில் 233 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் மூன்றாவது இடமும், ஹர்திக் பாண்டியா 231 ரன்கள் குவித்து நான்காவது வீரராகவும் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் இந்திய சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக செயல்படும் ஜெய்ஷா இந்தியா சீனியர் வீரர்கள் குறித்து பாராட்டி பேசி இருக்கிறார். இவர்கள் மூலமாக இளம் வீரர்கள் நிறைய அனுபவங்களை பெற முடியும் எனவும் இது இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நல்ல விஷயம் எனவும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:கோலி வெறுப்பாளர்கள் ஓய்வு எடுங்கள்.. 15 வருஷமா நீங்க இத கவனிக்கவே இல்ல – அஜய் ஜடேஜா பேட்டி

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “எங்களது முதன்மையான டி20 வடிவ கிரிக்கெட் தொடர்பான சையது முஸ்தாக் அலி டிராபியில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் கலந்து கொண்டு எதிர்கால சந்ததியினருடன் இணைந்து விளையாடி தங்களது சர்வதேச கிரிக்கெட் அனுபவத்தை அவர்களோடு பகிர்ந்து கொள்வதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஈகோ இல்லாமல் கற்கும் திறன் மற்றும் அறிவுப் பகிர்வு உள்ளிட்ட சிறந்த விஷயங்கள் கொண்ட இந்த பக்கத்தை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது ஒரு அழகான காட்சியாக இருப்பது மட்டுமல்லாமல் நமது வீரர்களின் சிறப்பானவற்றை வெளிப்படுத்துகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -