“ஐபிஎல் 2024 எப்போது தொடங்கும்..?” – பிசிசிஐ செக்ரெட்டரி ஜெய் ஷா கொடுத்த மாஸ் அப்டேட்.!

0
255

மகளிர் ஐபிஎல் 2024ஆம் ஆண்டு சீசனுக்கு ஏலம் இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேரடியாக கலந்துகொண்டு ஏலத்தை மேற்பார்வையிட்டார். 165 மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த ஏலத்தில் 30 வீராங்கனைகள் மகளிர் ஐபிஎல் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று நடைபெற்ற ஏலத்தில் மகளிர் வீராங்கனை கஸ்வி கௌதம் 2 கோடி ரூபாய்க்கு குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்திய அணிக்கு விளையாடாத வீராங்கனை அதிகபட்ச விலைக்கு எடுக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் அதிகபட்ச விலைக்கு எடுக்கப்பட்ட வீராங்கனை என்ற சாதனையும் படைத்திருக்கிறார் கஸ்வி கெளதம்.

- Advertisement -

ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் இந்த மகளிர் ஐபிஎல் தொடரில் கடந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் அந்த அணி டெல்லி கேப்பிட்டல் அணியை வீழ்த்தி முதலாவது டபுள்யுபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றியது . மேலும் இந்த ஏலத்தில் கலந்து கொண்ட பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஐபிஎல் மற்றும் டபிள்யு பி எல் எப்போது தொடங்கும் என்பது பற்றிய மாஸ் அப்டேட்டையும் கொடுத்து கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அவர் மகளிர் ஐபிஎல் பிப்ரவரி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என தெரிவித்தார். மேலும் இந்த போட்டி இந்தியாவின் ஒரே மாநிலத்தில் வைத்து நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். ஒரே மாநிலத்தில் ஒன்று அல்லது இரண்டு நகரங்களில் வைத்து போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது பற்றி அணியின் உரிமையாளர்களிடம் கலந்தாலோசித்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் பெங்களூர் அல்லது உத்தர் பிரதேசத்தில் வைத்து மகளிர் ஐபிஎல் நடைபெறலாம். குஜராத் மாநிலத்திலும் அகமதாபாத் மற்றும் ராஜ்கோட் என இரண்டு சர்வதேச தரத்தில் மைதானங்கள் இருக்கின்றன. வரும் காலங்களில் பரோடாவிலும் சிறப்பான சர்வதேச தரத்துடன் கூடிய மைதானம் கட்டப்பட இருக்கிறது என தெரிவித்தார்.

- Advertisement -

ஐபிஎல் 2024

மேலும் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடர் குறித்து பேசிய ஜெய்ஷா தொடருக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் வைத்து நடக்க இருக்கிறது என தெரிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி மே மாதம் இறுதியில் முடிவடையும் என தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வைத்து ஜூன் மாதம் நான்காம் தேதி நடைபெற இருப்பதால் அதற்கு முன்பாக ஐபிஎல் தொடர் முடியும்படி அட்டவணை அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார் . இதன் மூலம் இந்திய அணி வீரர்களுக்கு உலகக்கோப்பை போட்டி களுக்காக திட்டமிட போதுமான நேரம் இருக்கும் எனவும் தனது பேட்டியில் கூறினார்.

தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி முதலாவதாக டி20 தொடரில் விளையாட இருக்கிறது . இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்க உள்ளது. கடந்த வருட டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டிகளில் இங்கிலாந்து அணி இடம் இந்தியா படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை இளம்பிரர்களைக் கொண்ட இந்திய அணி உலக கோப்பைக்கு களமிறக்கப்படும் என பிசிசிஐக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.