தோனி மட்டும் தான் இந்தியாவிற்கு உதவ முடியும் – டி20 உலக கோப்பையில் தோனியின் தேவை என்ன என்பதை விளக்கிய பிசிசிஐ

0
209
MS Dhoni as Mentor

டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் 17ஆம் தேதி முதல் அமீரக மைதானங்களில் நடக்க இருக்கிறது. இதற்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் விராட் கோலியின் தலைமையிலான அணியை வழிநடத்த ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார் இந்திய அணியுடன் தோனியின் பயணம் முடிந்து விட்டது என்று பலர் நினைத்து நிலையில் தோனியின் இந்தத் தேர்வு பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் தோனி ஏன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற கேள்விக்கு பிசிசிஐ நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் பதில் கூறியுள்ளார். அவர் கூறும்போது தோனியை தவிர இந்த அணியை வழிநடத்த சிறந்த வீரர் வேறு யாரும் இருக்க முடியாது. மிகவும் அதிகமான அனுபவங்கள் உள்ள வீரரான தோனி நிச்சயமாக இடம் வீரர்களுக்கு உதவுவார் என்று கூறியுள்ளார். மேலும் அழுத்தம் நிறைந்த சூழ்நிலையில் அதை எவ்வாறு எளிதாக கையாள வேண்டும் என்ற முறையையும் தோனி நிச்சயம் வீரர்களுக்கு கற்றுத் தருவார் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

தோனி இந்த வேலைக்கு சரியாக இருப்பார் என்று ஜெய் ஷா கருதியதால் தோனியை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெய் ஷா நேரடியாக தோனியை சந்தித்து தோனி ஒப்புதல் கொடுத்த பின்னரே இந்த முடிவை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தோனி ஐபிஎல் தொடருக்காக அமீரகத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

தோனி தனது முடிவை ஏற்றுக் கொண்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் ஜெய் ஷா கூறியுள்ளார். இந்த உலகக் கோப்பை தொடருக்கு மட்டும்தான் தோனி ஆலோசகராக செயல்படுவார் என்றும் விராட் மற்றும் ரவி சாஸ்திரி உடன் இணைந்து நெருக்கமாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு வழி நடத்துவார் என்றும் ஜெய் ஷா கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் கேப்டன் கோலி மற்றும் ரவிசாஸ்திரி அணை இருவரும் தோனியின் வருகைக்கு எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காததால் இந்த முடிவு உடனே எட்டப்பட்டுள்ளது என்றும் ஜெய்ஷா கூறியுள்ளார். தோனியின் அனுபவத்தைப் பயன்படுத்தி இந்த முறை இந்திய அணி கோப்பை வெல்லும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

- Advertisement -