நாங்கள் வேண்டாமென முதலிலேயே சொன்னோம் ; அவர் தான் கேட்கவில்லை – கோலி விஷயத்தில் பிசிசிஐ பாய்ச்சல்

0
323
Sourav Ganguly and Virat Kohli

கடந்த 2016ஆம் ஆண்டு தோனி பதவி விலகியது முதல் 3 வகை கிரிக்கெட்டுக்கும் இந்திய அணியின் கேப்டனாக விளங்கியவர் விராட் கோலி. அதன்பின்பு இந்திய அணி பல்வேறு ஏற்ற இறக்கங்களில் கோலியின் தலைமையின் கீழ் பயணித்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக இந்திய அணி மாறியது கோலியின் தலைமையின் கீழ்தான். அதிபயங்கர வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கி இந்தியா என்றாலே சுழற்பந்து வீச்சு மட்டும்தான் என்ற வழி மொழியை மாற்றி காண்பித்தவர் கோலி. ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்தந்த நாட்டிலேயே ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்ற இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

இருந்தாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஐசிசி கோப்பையை விராட் கோலி யார் என்று கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாகவே பல ஆண்டுகாலமாக விராட்கோலி தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே தான் கேப்டனாக விளையாடப் போகும் கடைசி டி20 தொடர் இதுதான் என்று விராட் கோலி கூறிவிட்டார். கோலியின் விலகலை தொடர்ந்து டி20 போட்டிகளில் ரோகித் கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்தது. இதனால் ஒருநாள் போட்டிகளுக்கு நிச்சயம் கோழிதான் கேப்டனாக இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பிசிசிஐ ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவித்துள்ளது.

- Advertisement -

விராட் கோலி இந்தியாவுக்கு உலக அளவில் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த வீரர் ஒருநாள் போட்டிகளில் அவர் கேப்டனாக இருந்த இரண்டு ஐசிசி தொடர்களிலும் இறுதிப் போட்டி மற்றும் அரையிறுதிப் போட்டி என்று கடைசிவரை அணியை வழிநடத்திச் சென்றவர். அவளோ பெரிய வீரரை நொடிப்பொழுதில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ஞாயமா என்று ரசிகர்கள் கொந்தளித்து வந்தனர். தற்போது இதற்கு பிசிசிஐ விளக்கம் தெரிவித்துள்ளது. கங்குலி கூறுகையில் விராட் கோலி டி20 போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகும் போதே பிசிசிஐ வேண்டாம் என்று தடுத்ததாகவும் விராட் கோலி தான் கேட்கவில்லை என்றும் கூறினார். இதன் பின்னர்தான் பிசிசிஐ ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இரண்டு வெவ்வேறு கேப்டன்கள் இருப்பது முறையல்ல என்பதால் புதிய கேப்டனை நியமித்ததாக கூறியுள்ளது. கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதால் இனிமேல் பழைய பேட்டிங் ஜாம்பவானான விராட் கோலியை பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.