நடப்பு ஐபிஎல் தொடரில் வீரர்கள் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் வரை அனைவருக்கும் பிசிசிஐ ஒரு குறிப்பிட்ட நபரை வைத்து எச்சரிக்கையை அனுப்பியிருக்கிறது. தற்போது அந்த மர்ம மனிதர் குறித்தான தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிசிசிஐ சந்தேகிக்கும் ஒரு குறிப்பிட்ட நபர் ஐபிஎல் தொடரில் வீரர்கள், குடும்பத்தினர் மற்றும் அணி நிர்வாகம் ஆகியோரை குறி வைத்து பரிசு பொருட்களை அளித்து தன்னை மிக நெருக்கமாக காட்டிக்கொண்டு தவறான வேலைகளில் ஈடுபடுவதாக செய்திகள் கசிந்து இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்சிங்
ஐபிஎல் தொடரில் 2015 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மேட்ச் பிக்சிங் புகார்கள் பெரிய சூறாவளியை உருவாக்கின. இதில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட சில வீரர்கள் தண்டிக்கவும் பட்டார்கள். மேலும் பாகிஸ்தான் அம்பயர் வரை இதில் சம்பந்தப்பட்ட இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டது. இது அந்த நேரத்தில் உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.
மேலும் சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இரண்டுமே மேட்ச் பிக்சிங் சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபட்டதால், இந்த இரண்டு அணிகளுக்கும் இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் தடை விதிக்கப்பட்டது. பிறகு இந்த இரண்டு அணிகளுமே 2018 ஆம் ஆண்டில்தான் திரும்பின. அங்கிருந்து ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்சிங் சம்பந்தமான விஷயங்களை கண்காணிக்க ஊழல் தடுப்பு பிரிவு மிகவும் உன்னிப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஊழல் தடுப்பு பிரிவு கொடுத்த எச்சரிக்கை
இது குறித்து ஊழல் தடுப்பு பிரிவு தரப்பில் கூறப்பட்டுள்ள எச்சரிக்கையில் கிரிக்கெட் சூதாட்ட புத்தியில் உடன் தொடர்புடைய ஒரு ஹைதராபாத் தொழிலதிபர் ஐபிஎல் தொடரில் இருக்கும் சிலரை சிக்க வைக்க முயற்சி செய்கிறார், எனவே ஐபிஎல் அணிகள் அனைத்துமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க : கோலியோ, சச்சினோ கிடையாது.. இவர் தான் கிரிக்கெட்டின் மெஸ்ஸி.. புவனேஸ்வர் குமார் பாராட்டு
இது சம்பந்தமான அறிக்கையில் “சந்தேகத்துக்குரிய அந்த நபர் ஐபிஎல் ரசிகராக தன்னை காட்டிக் கொண்டு, ஐபிஎல் பங்கேற்பாளர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். மேலும் போட்டிகளின் போதும் அணிகள் தங்கி இருக்கும் ஹோட்டல்களிலும் காணப்பட்டிருக்கிறார். வீரர்கள் மற்றும் ஊழியர்களுடன் தொடர்பு கொள்ள அவர் முயற்சி செய்திருக்கிறார். மேலும் தனிப்பட்ட பார்ட்டிகளுக்கு அழைத்து இருக்கிறார். வீரர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினருக்கும் பரிசுகள் வழங்கி இருக்கிறார்” என்று கூறப்பட்டிருக்கிறது.