ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் தோனி தற்போது ஃபார்முக்கு திரும்பி லக்னோக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக விளையாடி இருக்கிறார். இதன் மூலம் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஒரு நேர்காணலில் பங்கேற்றார்.
அப்போது தோனி குறித்து பேசிய புவனேஸ்வர் குமார், கிரிக்கெட் உலகின் மெஸ்ஸி தோனி என்று பாராட்டிருக்கிறார். இது குறித்து பேசி அவர், எனக்கு மிகப் பிடித்த விளையாட்டு வீரர்கள் என்றால் தோனியும் மெஸ்ஸியும் தான். நான் தோனியுடன் அதிக நேரம் செலவழித்து இருக்கின்றேன். தோனியுடன் இருப்பது எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும்.
தோனியும், மெஸ்ஸியும் பிடிக்கும்:
தோனியின் இயல்பு என்ன என்று எனக்கு தெரியும். அணியில் இருக்கும் பலரும் தோனியுடன் நேரத்தை செலவழிக்க விரும்புவார்கள். நான் மெஸ்ஸி விளையாடுவதை டிவியில் தான் பார்த்திருக்கின்றேன். எனக்கு தெரிந்தவரை மெஸ்ஸி ஒரு வித்தியாசமான வீரர். இதே போல் தோனியும் ஒரு வித்தியாசமான வீரராக எனக்கு தெரிகிறார்.
விக்கெட் கீப்பரின் பணி என்பது கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமானதாகும். விக்கெட் கீப்பர் நிற்கும்போது மைதானத்தில் உள்ள அனைத்து கோணங்களும் அவருக்குத் தெரியும் தோனி கேப்டனாக இருந்தபோது அவர் பில்டிங்கை சரியாக நிறுத்துவார். பந்து எந்த திசையில் செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எல்லாம் தோனிக்கு நன்றாக தெரியும்.
இப்படி தான் பந்துவீச சொல்வார்:
இதனால் அதற்கு தகுந்தார் போல் பந்துவீசும் படி எங்களுக்கு அவர் அறிவுறுத்துவார். அதன்படி அவர் பில்டிங் இருக்கும் ஆளை நிறுத்துவார் என்று புவனேஸ்வர் குமார் பாராட்டியுள்ளார். ஆர் சி பி அணியின் முக்கிய வீரராக தற்போது புவனேஸ்வர் குமார் விளங்குகிறார்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2025.. சிஎஸ்கே வீரர் விஜய் சங்கர் தண்ணீர் பாட்டிகள் கொடுக்க தான் பயன்படுவார்.. ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம்
இந்த நிலையில் சிஎஸ்கே அணியும் ஆர்சிபி அணியும் வரும் மே மூன்றாம் தேதி சனிக்கிழமை பெங்களூரில் மோதுகிறது. சிஎஸ்கே ஏற்கனவே ஆர்சிபி உடன் தோல்வியை தழுவிய நிலையில் இந்த போட்டியில் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.