இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. சமயத்தில் இந்த முடிவை பிசிசிஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக வந்த செய்திகள் உண்மையில்லை என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்து விட்டார். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டார். இந்த நிலையில் விராட் கோலியும் ஓய்வு பெற்றால் அது இந்திய டெஸ்ட் அணிக்கு பெரிய ஆபத்தாக அமையும் என பிசிசிஐ கருதியதாக செய்திகள் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய டெஸ்ட் அணியின் துரதிஷ்டம்
இதுவரை நடைபெற்றுள்ள மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் முதல் இரண்டு சைக்கிளில் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறி சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. மூன்றாவது முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் கையில் இருந்த வாய்ப்பை சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோற்று இழந்தது.
எனவே இந்திய டெஸ்ட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான அதிகபட்ச வாய்ப்பில் இருந்து மூன்றாவது முறையாக அதை இழந்திருக்கிறது. மேலும் ஐபிஎல் முடிந்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் முதல் தொடர் என்பதால் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமைவது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ காட்டிய அதிரடி
கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி வெறும் 190 ரன்கள் மட்டுமே 29 ரன் ஆவரேஜில் எடுத்தார். இந்த மொத்த ரன்னில் ஒரு சதமும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக விராட் கோலியை பிசிசிஐ ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்ய விரும்பவில்லை என்று புதிய செய்திகள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க : முகமது சமியின் அருமை தெரியாம பேசாதீங்க.. சிவப்பு பந்தில் அவரோட இந்த வித்தை யார்கிட்டயும் கிடையாது – இந்திய முன்னாள் வீரர்
மேலும் விராட் கோலி ஓய்வு முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பிசிசிஐ கேட்டுக் கொள்ளவில்லை எனவும், அவரை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இந்திய தேர்வுக்குழு தேர்வு செய்ய விரும்பவில்லை என்றும் பிசிசிஐ தரப்பில் செய்திகள் கசிந்து இருக்கிறது. இதன் காரணமாகவே விராட் கோலி தன்னுடைய ஓய்வு முடிவை எடுத்து இருக்கிறார் என்றும் பேசப்பட்டு வருகிறது. தற்போது முடிவெடுக்கும் சூழ்நிலையில் விராட் கோலி கிடையாது என்றும், இந்திய கிரிக்கெட் வாரியம்தான் இருக்கிறது என்றும் அதிரடியான தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது!