ஸ்டோக்ஸ்க்கு எதிர்ப்பாக பிசிசிஐ கொண்டு வரும் புதிய விதி.. அணிகளின் பலம் அதிகரிப்பு.. ரசிகர்கள் வரவேற்பு

0
15
Bcci

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் மறுத்த புதிய விதி உருவாக்கத்திற்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் உள்நாட்டு கிரிக்கெட்டில் அதே விதியை கொண்டு வந்து அசத்தியிருக்கிறது.

உலக அளவில் பெரிய விளையாட்டுகளில் பெரிய அளவில் மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் விளையாட்டாக கிரிக்கெட் மட்டுமே இருக்கிறது. மற்ற விளையாட்டுகள் அனைத்தும் மாற்றத்தை அனுமதிக்க முடியாத அளவுக்கு இறுக்கமான விளையாட்டுகளாக இருந்து வருகின்றன.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் எதிர்ப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டின் போது இந்திய வீரர் ரிஷப் பண்ட் கால் பாதத்தில் கடுமையான முறையில் காயமடைந்தார். மேலும் அணிக்கு தேவை இருந்த காரணத்தினால் விளையாட முடியாத நிலையிலும் வந்து விளையாடினார். இரண்டாவது இன்னிங்ஸ் போது அவர் விளையாட வேண்டிய சூழ்நிலை வரவில்லை.

இந்த நிலையில் அந்த போட்டி முடிவுக்குப் பிறகு ஒரு வீரர் கடுமையாக காயம் அடைந்தால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் விளையாட அனுமதிக்கப்படும் வகையில் புதிய விதிகள் கொண்டு வருவதை இந்திய தரப்பில் ஆதரித்தார்கள். ஆனால் பென் ஸ்டோக்ஸ் இதை மிகவும் கடுமையான முறையில் எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பிசிசிஐ அசத்தல்

இந்த நிலையில் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிவப்பு பந்து வடிவத்தில் காயமடையும் வீரர்களுக்கு மாற்றாக வேறொரு வீரரை விளையாட வைக்கும் விதியை இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்திருக்கிறது. இது குறித்து அனைத்து கிரிக்கெட் சங்கங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க : பிரிவிஸ் விஷயத்தில் அஸ்வின் சர்ச்சை பேச்சு.. விளக்கம் கொடுத்த சிஎஸ்கே.. ரசிகர்கள் கோபம்

மேலும் கள நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் வீரர்களின் காயத் தன்மையை நன்கு ஆராய்ந்து, பிறகு மாற்றுவீரரை அனுமதிக்கலாமா வேண்டாமா? என்று முடிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் காயத்தால் ஒரு அணி வீரரை இழப்பது தடுக்கப்படும். மேலும் விளையாட்டுப் போட்டித் தன்மை வாய்ந்ததாக மாறும். இத்துடன் இந்த விதி இந்திய உள்நாட்டு வெள்ளைப்பந்து தொடர்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -