பிரிவிஸ் விஷயத்தில் அஸ்வின் சர்ச்சை பேச்சு.. விளக்கம் கொடுத்த சிஎஸ்கே.. ரசிகர்கள் கோபம்

0
44
Ashwin

சிஎஸ்கே அணிக்கு தென் ஆப்பிரிக்க இளம் வீரர் டிவால்ட் பிரிவிசை ஒப்பந்தம் செய்தது குறித்து அஸ்வின் பேச்சு சர்ச்சையான நிலையில் தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகம் அதற்கான விளக்கம் கொடுத்திருக்கிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 2.2 கோடிக்கு தமிழக இடது கை வேகம் பந்துவீச்சாளர் குல்ஜப்னித் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவர் காயமடைந்த காரணத்தினால் அவருடைய இடத்திற்கு டிவால்ட் பிரிவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

- Advertisement -

அஸ்வின் கிளப்பிய சர்ச்சை

இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் டிவால்ட் பிரிவிசை சிஎஸ்கே நிர்வாகம் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்திருக்கும் என்று கூறியது பெரிய சர்ச்சையாக மாறிவிட்டது. ஏனென்றால் இதற்குள் ஐபிஎல் விதிமுறை இருப்பதாக விஷயங்கள் வெளியாகின.

அதாவது எந்த வீரருக்கு மாற்றாக இன்னொரு வீரர் தேர்வு செய்யப்படுகிறாரோ அவருடைய விலையிலேயே அல்லது அதற்கும் குறைவாக அவருடைய அடிப்படை விலையிலேயே ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். இந்த வகையில் டிவால்ட் பிரிவிஸ் அவருடைய அடிப்படை விலையான 75 லட்சம் ரூபாயிலிருந்து 2.2 கோடிக்குள் வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது ஐபிஎல் விதியாக இருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே அணி நிர்வாகம் விளக்கம்

இந்த நிலையில் இது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் டிவால்ட் பிரிவிஸ் வாங்கப்பட்டதில் எந்தவித ஐபிஎல் விதிமுறைகளும் மீறப்படவில்லை எனவும், அவரை அதிகபட்சமாக 2.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெளிவுபடுத்தி இருக்கிறது. இதன் மூலம் சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது.

இதையும் படிங்க : 6 பந்து 10 ரன்.. வெளுத்து விட்ட வின்டேஜ் மேக்ஸ்வெல்.. சிஎஸ்கே பிரிவிஸ் அதிரடி வீண்.. ஆஸி தொடரை கைப்பற்றியது

மேலும் சிஎஸ்கே அணிக்கு அஸ்வினை தேர்வு செய்து ஐபிஎல் தொடர் நடந்த பொழுது அவருடைய யூடியூப் சேனலில் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாக மாறின. மேலும் அவருடைய யூடியூப் சிஎஸ்கே விளையாடும் போட்டிகளை விமர்சனம் செய்யவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையாக மாறியது. தற்போது இந்த விஷயத்திலும் அவரால் சர்ச்சை ஏற்பட்டு இருப்பது பரபரப்பாக இருக்கிறது.

- Advertisement -