“பிசிசிஐ ஏதோ தப்பு செய்யுது.. ஜெயவர்த்தனாவை விசாரிக்கனும்.. டாஸ் ஜெயிச்சு பவுலிங் ஏன் எடுத்தாங்க?” – இலங்கை எம்பி குற்றச்சாட்டு

0
10867
BCCI

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்து வருவது நமக்கு தெரிந்ததே. இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தையும் இது பெரிய மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

அதே சமயத்தில் இந்திய அணியின் இந்த எழுச்சி பல கிரிக்கெட் நிர்வாகங்களுக்கு பெரிய சங்கட்டங்களை கொடுத்திருக்கிறது. இதனால் சில கிரிக்கெட் நிர்வாகங்களில் அதிரடி மாற்றங்கள் முன்னெடுக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரிகிறது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் தோற்றத்திற்கு பிறகு அந்த அணி பற்றிய விமர்சனங்கள் சொந்த நாட்டில் இருந்து மிகக் கடுமையாகக் கிளம்பின. அங்கிருந்து குற்றச்சாட்டுகளாக அந்த விமர்சனங்கள் மாறி பாகிஸ்தான் அணி பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாடு மேலும் தொடர, பாகிஸ்தான் தரப்பில் இருந்து பிசிசிஐ ஐசிசிஐ கையில் வைத்து இந்திய அணிக்கு சாதகமாக செயல்படுகிறது என்ற கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதே போல இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திலும் புயல்கள் கிளம்பி அது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டாக மாறி இருக்கிறது. இந்திய அணி கடந்த ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி 50 ரன்களில் சுருட்டியது. இதற்கடுத்து நடப்பு உலக கோப்பையில் 55 ரன்களுக்கு சுருட்டியது.

- Advertisement -

இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டு, தற்பொழுது இந்த முடிவை இலங்கை நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. ஆனால் தற்போது இலங்கை கிரிக்கெட்டின் சரிவு இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டாக உருவெடுத்திருக்கிறது.

இது குறித்து இடங்கை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சா நாடாளுமன்றத்தில் பேசும் பொழுது “மும்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது அன்றைய தினம் டாஸ் வென்ற பிறகு இலங்கை அணியை பந்துவீச்சை தேர்வு செய்ய சொன்னது மகிலே ஜெயவர்த்தனா. இந்திய கேப்டன் கூட இலங்கையின் இந்த முடிவுக்கு அதிர்ச்சி அடைந்தார். இந்தியா கூட அந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்யவே ஆர்வமாக இருந்தார்கள்.

பிசிசிஐ ஐசிசியை ரூல் செய்கிறது. இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவை கூட இந்தியாதான் முடிவு செய்கிறது. மேலும் துவக்க விழாவை இல்லாமல் தொடங்கப்பட்டு இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது துவக்க விழா கொண்டாடப்பட்டது.

கிரிக்கெட்டில் ஏதோ பெரிய விஷயம் நடக்கிறது. ஜெயவர்த்தனா ஏன் இலங்கை கேப்டனை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய சொன்னார் என்பது குறித்து உடனே நான் விசாரணை செய்ய வேண்டும்!” என்று குற்றம் சாட்டி கூறியிருக்கிறார்!