எந்த காரணம் சொல்லி விராட் கோலி நீக்கப்பட்டாரோ, அதே முறையை அமல்படுத்துகிறது பிசிசிஐ!

0
971

பிசிசிஐ, தனித்தனி கேப்டன் முறையை அமலுக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றோடு வெளியேறியதால் கடும் அதிருப்தியில் இருக்கிறது பி சி சி ஐ. இதன் காரணமாக தற்போது இருக்கும் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை முழுமையாக கலைத்துவிட்டு புதிய தேர்வு குழுவை நியமிக்க அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

- Advertisement -

2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து மட்டும் விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். ஆனால் மூன்று வித போட்டிகளுக்கும் ஒரே கேப்டன் தான் இருக்க வேண்டும் என்ற ஒற்றை முடிவில் இருந்த பி சி சி ஐ, விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுமாறு மறைமுகமாக அழுத்தம் கொடுத்திருக்கிறது.

இறுதியில் அவர் மொத்த கேப்டன் பொறுப்பையும் விட்டு விலகிக் கொண்டார். ரோகித் சர்மா தற்போது அந்த பொறுப்பை ஏற்று வழி நடத்தி வருகிறார்.

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை மற்றும் அதற்கு முன்பு நடந்த ஆசியகோப்பை இரண்டிலும் ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு திருப்தி அளிக்கவில்லை. மேலும் மூன்று வித போட்டிகளுக்கும் ஒரே கேப்டன் இருந்தால் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்த பிசிசிஐ, தற்போது தனித்தனி கேப்டன் முறையை அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வருகிறது.

- Advertisement -

டி20 போட்டிகளுக்கு என்று தனி கேப்டன், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தனி கேப்டன் என நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

விராட் கோலியை எந்த காரணம் கூறி தனித்தனி கேப்டன் முடை சரிவராது; கேப்டன் பொறுப்பில் இருந்து விலகவேண்டும் என்று வற்புறுத்தினர்களோ, தற்போது அதே காரணத்தை கூறி தனித்தனி கேப்டன் முறைத்தான் இந்திய அணியின் எதிர்காலத்திற்கு நல்லது என்று பிசிசிஐ முடிவு செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.