பிசிசிஐ 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு வீரர்களை தக்க வைப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு அறிவித்த விதியில், தற்பொழுது சிறிது மாற்றம் செய்து அறிவித்திருக்கிறது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மெகா ஏலத்துடன் நடைபெறுகிறது. இதன் காரணமாக வீரர்களை தக்க வைப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பாக பிசிசிஐ சில புதிய விதிகளை வீரர்கள் மற்றும் விலை வாரியாக கொடுத்திருந்தது. தற்பொழுது இதில் சிறு மாற்றத்தை செய்திருக்கிறது.
பிசிசிஐ முன்பு அறிவித்த தக்க வைப்பு விதி
பிசிசிஐ முன்பு தக்க வைப்பதற்கு அறிவித்த விதியில் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்றும், அந்த ஆறு வீரர்களில் அதிகபட்சமாக இரண்டு அன்கேப்டு வீரர்கள் இருக்கலாம். ஆனால் ஆறு வீரர்களை தக்க வைக்கும் பொழுது கட்டாயமாக அதில் ஒரு வீரர் அன் கேப்டு வீரராக இருக்க வேண்டும். மேலும் அனைத்து வீரர்களும் இந்திய வீரர்களாகவும் இருக்கலாம் என்று அறிவித்திருந்தது. இதில் அன் கேப்டு வீரருக்கு நான்கு கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்திருந்தது.
இது இல்லாமல் தக்கவைக்கப்படும் ஐந்து வீரர்களில் முதல் வீரருக்கு 18 கோடி, இரண்டாவது வீரருக்கு 14 கோடி, மூன்றாவது வீரருக்கு 11 கோடி, நான்காவது வீரருக்கு 18 கோடி, ஐந்தாவது வீரருக்கு 14 கோடி என மொத்தம் 75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
பிசிசிஐ செய்துள்ள திருத்தம்
தற்போது பிசிசிஐ ஐந்து வீரர்களை தக்க வைப்பதாக இருந்தால், மொத்தத் தொகையான 75 கோடி 5 வீரர்களுக்கும் அணிகள் தாங்கள் விருப்பப்படும் அளவுக்கு பிரித்துக் கொடுக்கலாம் என்று அறிவித்திருக்கிறது. அதாவது வரிசையாக தக்கவைக்கப்படும் வீரர்களுக்கு இவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்கின்ற கட்டுப்பாடு கிடையாது.
இதையும் படிங்க : ஆஸியில் கில் அந்த வேலைக்கு சரிப்பட்டு வர மாட்டார்.. எதையும் செய்யும் இவரை யூஸ் பண்ணுங்க – அனில் கும்ப்ளே பேச்சு
உதாரணமாக முதலில் தக்கவைக்கப்படும் வீரருக்கு 18 கோடி ரூபாய் என்று இருந்தது, தற்பொழுது முதலில் தக்க வைக்கப்படும் வீரருக்கு 20 கோடியும் தரலாம் 15 கோடி கூட தரலாம். இப்படி அணி நிர்வாகத்தின் விருப்பம் போல் ஐந்து வீரர்களுக்கும் 75 கோடி அவரவர் தகுதிக்கேற்றப்படி பிரித்துக் கொடுக்கலாம். ஆனால் ஐந்து வீரர்களை தக்க வைத்தால் 75 கோடி ரூபாய் மொத்த தொகையில் கழிக்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஐந்து வீரர்களை தக்க வைத்தால் மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.






